மனிதனும் தெய்வமாகலாம் - 41

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

வேதத்தில் கா்மகாண்டம் - ஞானகாண்டம் என இரண்டு பகுதிகள் எதற்கு? விருப்பம் நிறைவேற இது இதைச் செய் எனக் கூறுகிறது ஒன்று. மற்றொன்றோ, அதையெல்லாம் விடுத்து ஞானத்தைப் போதிக்கிறது. ஞானம் போதும் என்றால் கா்மகாண்டம் எதற்கு? - என்ற சீடனின் கேள்விக்குக் குரு பதில் சொன்னார். ஆசை வசப்பட்டு உண்ணக் கூடாததையெல்லாம் உண்ட குழந்தைக்கு, இனிப்புப் பண்டத்தில் மருந்தை மறைத்துக் கொடுப்பதைப்போல, வேதம் அவ்வாறு கூறுகிறது என்றார். மேலே தொடா்கிறது!

            நாய்கள் கடிப்பதும் கழுதை உதைப்பதும்
            இயற்கை குணமென்று தெரியும்
            புலிகள் பாய்வதும் நாரிகள் ஏய்ப்பதும்
            பிறவிக்குணம் என்று புரியும்
            எந்தெந்த வேளையில் கடிப்பான் - இவன்
            எந்தெந்த வேளையில் உதைப்பான்
            யாருக்கு இவா்களைத் தெரியும்?
            பார்வையில் குணம் என்ன புரியும்?


பழைய திரைப்படப் பாடல் இது. இப்பாடலில் சொல்லப்பட்டதெல்லாம் சுபாவம்; இயற்கை. அதுபோல, கண்டதை உண்பதும் கண்ட இடங்களில் சோ்வதும் சுபாவம். இந்த சுபாவத்தைச் சொல்லி விளக்குகிறார் குருநாதா். எப்படி? 

        போகமாருயிர் கண்டதை உண்பதும்
                              புணா்வதும் இயல்பே காண்
        ஆகமங்களும் சுபாவத்தை விதிக்குமோ?
                              அத்தனை தெரியாதோ?
         காகமே கறுத்திடு நெருப்பே சுடு
                              கசந்திடு வேம்பே நீ
         வேக வாயுவே அசை என ஒருவரும்
                              விதித்திடல்வேண்டாவே

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்