யாதுமாகி நின்றாய் காளி!

பி.என்.பரசுராமன், ஓவியம்: பத்மவாசன்

‘க என்னும் எழுத்து அரசன், நான்முகன், ஆன்மா, உடல், செல்வன், திருமால், மனம், ஆனைமுகக் கடவுள், நலம், ஒளி வல்லவன் எனப் பல பொருள் தரும். ‘அளி’ என்பது வழங்குதல் என்று பொருள் தரும். அதன்படி காளி என்னும் சொல்லுக்கு, அரசபோகத்தை அளிப்பவள், ஆன்ம விடுதலையை அளிப்பவள், உடல்நலத்தை அருள்பவள், செல்வங்களைத் தருபவள், தூய மனதை அளிப்பவள், ஒளிமயமான வாழ்வை அருள்பவள், வல்லமையைத் தருபவள் என்று பொருள் தரும். அப்படிப்பட்ட அன்னை தான் சென்னை தம்புசெட்டித் தெருவில் எழுந்தருளி இருக்கும் காளிகாம்பாள்.

அதிகாலைப் பொழுதிலேயே பல முக்கிய பிரபலங்களும் வந்து வழிபடும் கோயில்.

மலேசியா, மொரீஷியஸ், கொழும்பு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து வழிபடும் கோயில்.

தேசிய கவி பாரதியார் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்து இருக்கிறார். அவர் இயற்றிய ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்ற பாடல் காளிகாம்பாளைப் பற்றிய பாடலே ஆகும்.
1677-ம் ஆண்டு மராட்டிய மாவீரன் சிவாஜி இந்தக் கோயிலுக்கு வந்து காளிகாம்பாளை வழிபட்டுச் சென்றதாகவும், அதன்பிறகே ‘சத்ரபதி’யாக முடிசூட்டிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் காளிகாம்பாளை தரிசித்து வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்