கயிலை... காலடி... காஞ்சி! - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிவேதிதா

ஜாதா சீதலசைலத: ஸுக்ருதிநாம் த்ருச்யா பரம் தேஹிநாம்
லோகாநாம் க்ஷணமாத்ர ஸம்ஸ்மரணத: ஸந்தாப விச்ச்சேதிநீ
ஆச்சர்யம் பஹுகேலநம் விதநுதே நைச்சல்யமா பிப்ரதீ
கம்பாயாஸ் தடஸீம்நி காபி தடிநீ காருண்யபாதோமயீ


கம்பை நதிக்கரையில் அசையாததும், கருணை என்னும் நீர் நிரம்பியதுமான மற்றொரு நதியானது விந்தைக்கு உரிய பல விளையாட்டுகளைப் புரிகிறது. அதுவும் பனிமலையில் தோன்றியதே! புண்ணியம் செய்தவரால் மட்டுமே காணத் தக்கது.  நொடிப் பொழுது தியானித்தாலே போதும், உலகத்தின் தாபங்களைப் போக்கிவிடும்.

- மூகபஞ்சசதீ

கருணையே வடிவாக காஞ்சியில் தவக்கோலம் பூண்டிருக் கும் அம்பிகை காமாட்சி, திருவிழா நாட்களில் வீதியுலா வருவதும், அவளை தரிசிக்க அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதும் வழக்கம். வீதியுலாவின்போது கச்சபேஸ்வரர் கோயில் அருகில் நடைபெறும் வாணவேடிக்கைகளை ஆர்வத்துடன் பார்ப்பதில் சிறியவர் பெரியவர் என்ற வேறுபாடே இருக்காது.

ஒருமுறை, கச்சபேஸ்வரர் கோயில் அருகில் வாண வேடிக்கைகள் முடிந்த பிறகு, அம்பிகையின் வீதியுலா மேற்கொண்டு தொடராமல் அப்படியே நின்றுவிட்டது. காரணம், வீதியுலாவின் முன்பாக வந்துகொண்டிருந்த யானை அப்படியே அசையாமல் நின்றுவிட்டது. அருகில் சென்றாலே ஆக்ரோஷத்துடன் பிளிறத் தொடங்கியது. காரணம் புரியாமலும், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் அனைவரும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர;’ என்று குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர். இருள் நீக்க வந்த ஒளிஞாயிறு போல் மஹா ஸ்வாமிகள் வந்துகொண்டிருந்தார். நேராக அம்பிகையிடம் வந்த மஹா ஸ்வாமிகள் அம்பிகையைக் கண்குளிரத் தரிசித்து மனம் நிறைய வழிபட்டார். அப்போது அவர் திருமுகத்தில்தான் எத்தனை ஆனந்தம்?!

பின்னர், யானையின் அருகில் சென்ற மஹா ஸ்வாமிகள் அதன் உடலைத் தம் திருக்கரங்களால் தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சர்யம்..! அடமாக நின்ற இடத்தில் நின்றபடி இருந்த யானை அடுத்த கணமே மெள்ள மெள்ள அசைந்து நடக்கத் தொடங்கியது. அம்பிகையின் வீதியுலா வும் தொடர்ந்தது. அம்பாளை தரிசித்த மன நிறைவுடன் மஹா ஸ்வாமிகளும் தம்முடைய யதாஸ்தானத்துக்குப் புறப்பட ஆயத்தமானார்.

இதன் பின்னணியில் சிலிர்ப்பூட்டும் ஒரு நிகழ்வு உள்ளது.மஹா ஸ்வாமிகளுக்காகத் தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சந்நிதி கொண்டு அருள்புரியும் சந்திரசேகர கணபதி புரிந்த அருளாடலே அது!

மஹா ஸ்வாமிகள் தேனம்பாக்கத்தில் இருந்தபோது ஒருநாள், தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது. ‘‘இன்னிக்கு என்ன விசேஷம்? பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறதே?’’ என்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார் பெரியவா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்