அருட்களஞ்சியம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தீராத விளையாட்டுப் பிள்ளை!  -பி.ஸ்ரீ..

ஆழ்கடல்சூழ் வையகத்தார் ஏசப்போய், ஆய்ப்பாடி
தாழ்சூழலார் வைத்த தயிருண்டான், காணோடீ!
தாழ்சூழலார் வைத்த தயிருண்ட, பொன்வயி(று), இவ்
ஏழுவதும் உண்டும் இடம் உடைத்தால்! சாழலே’’

- திருமங்கையாழ்வார்


ஏசப் போகிறார்களே! தெரியாதா? தெரிந்தும் அப்படிச் செய்வானேன்!

அந்தக் கவலை அவனுக்கில்லை. ‘‘தயிர் போய்விட்டதே!’’ என்ற கவலை அவளுக்குமில்லை. ‘அப்படியாவது அந்த முகத்தைப் பார்க்கக் கிடைத்ததே!’ என்ற திருப்தி பரஸ்பரமாயிருக்கிறது. அவனுக்கு அந்த விளையாட்டில் பரம திருப்தி. அவன் வயிறு குளிர, அவள் நெஞ்சும் குளிர்கிறது. தீராத விளையாட்டு; ஓயாத தொல்லை; ஆனால் குறையாத திருப்தி.

ஏதோ ஒரு காலத்தில் நடந்ததாம் கோகுலத்திலே அந்த விளையாட்டு, எக்காலத்திலும் உலகம் ஏசும்படி, உலகத்தார் ஏசவேணுமென்றே போய்ச் செய்த காரியம் போலிருக்கிறதாம்.

வாஸ்தவம்தானே; இக்காலத்திலும் அந்த விளையாட்டுப் பிள்ளையை- அந்தக் கள்ளக் கிருஷ்ணனை - ஏசுவோர் இல்லையா?

ஆனால் தயிருண்ட அந்த வயிறு, தயிரை மட்டுமா உண்டது? தயிர்க்காரியின் உள்ளத்தையும் உண்டது;  உயிரையும் உண்டது. தயிர், தயிர்க்காரி, ‘கள்ளப் பிள்ளை’யென்று ஏசினவர் - எல்லாரையும் உண்டது.

என்ன பசி! ஆ, என்ன வயிறு!

வாய் குளிர ஏசினவரையும் உண்டது; வயிறு எரிய ஏசினவரையும் உண்டது. ஏசினவர், ஏசுகிறவர், ஏசப் போகிறவர்களையும் உண்டுவிட்டதாம். அந்த ‘ஆய்ப்பாடி’யோடு, அகில உலகத்தையும் உண்டதாம், ‘தயிருண்ட பொன் வயிறு.’

ஏன்? எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்