சங்கடங்கள் தீர்க்கும் சங்கு முத்திரை!

சிவன், விஷ்ணு வழிபாட்டில் சங்குக்கு பிரதான இடம் உண்டு. பிரதோஷம் உள்ளிட்ட சமயங்களில் சிவனை பூஜை செய்யும்போது சங்கு ஒலிப்பர். அதேபோல் மஹாவிஷ்ணுவின் ஆயுதங்களில் பிரதானமானது சங்குதான். இப்படிப்பட்ட மகத்துவமான சங்கு முத்திரை நமக்கு என்னென்ன நன்மைகளை அள்ளித் தருகிறது என்று பார்ப்போம்.

எப்படிச் செய்வது?

சப்பணங்கால் இட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடி, மார்புக்கு நேராக கைகளை வைக்கவும். இடது கையின் கட்டை விரலை, வலது கையின் நான்கு விரல்களால் சுற்றி மூடவும். வலது கையின் கட்டை விரலின் நுனியை, இடது கையின் மற்ற  விரல்களின் நுனிகளால் தொட வேண்டும். (படம் பார்க்க) இதைப் பார்க்க சங்கின் தோற்ற அமைப்பு போலவே காணப்படும்.

இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம். இந்த முத்திரையை கையில் வைத்தபடி ‘ஓம்’ என்ற ஒலியை எழுப்பி வரவும். இவ்வாறு செய்தால் பன்மடங்கு பலனைப் பெற முடியும்.

பலன்கள்

மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் பாஞ்சஜன்யம் என்ற சங்கும் ஒன்று. மங்கல சின்னமான சங்கில் இருந்து வரும் ஒலி எதிரிகளை அதிரச் செய்யும். அதுவே மகாவிஷ்ணுவை சரண் அடைந்தவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கும். இத்தகைய மகத்துவம் பெற்ற சங்கின் பெயரால் அழைக்கப்படும் முத்திரையைச் செய்வதன் மூலம் துன்பம் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.

உடல் எனும் ஆலயத்தில், இறைவனை தரிசிக்க, இந்தச் சங்கு முத்திரை நமக்கு உதவுகிறது.

சங்கின் ஒலி 72,000 நாடி, நரம்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது. அதைப் போலவே, சங்கு முத்திரை நம் உடலில் உள்ள அத்தனை நாடி, நரம்புகளையும் சுத்திகரித்து புத்துயிர் தருகிறது.
ஸ்கந்த புராணம், சங்கின் ஒலி நம் ஏழு பிறவிகளின் கர்மவினையை போக்குவதாகக் குறிப்பிடுகின்றது. நமக்குள் இருக்கும் எதிர்மறை சிந்தனைகளை முழுவதுமாக, அதன் அதிர்வலையால் அகற்றிவிடுகிறது.

இம்முத்திரை ஸ்தூல உடலை மட்டு மல்லாது, சூட்சும மற்றும் காரண தேகத்தையும்  தூய்மைப்படுத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்