ஆதியப்பன் அருட்காட்சி ‘மாத்ரு பீடம் இது!’

குடந்தையில் மகாமக நாயகன் ஆதிகும்பேஸ்வரர். இவருக்கு மட்டுமே திருப்பெயரில் ‘ஆதி’ என்ற சிறப்பும் சேர்ந்திருக்கும். அந்தச் சிறப்புக்கான காரணம் குறித்து, ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் கே.என்.சிவசங்கர சிவாச்சார்யரிடம் கேட்டோம். இவர் திருச்சி அல்லூர் பாடசாலையில் ஆகம பாடங்கள் பயின்று சிவாகம சிரோமணி பட்டமும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் சாஹித்ய சிரோ மணி பட்டமும் பெற்றவர்.

ஆதிகும்பேஸ்வரரின் திருப்பெயர் மகிமை குறித்துக் கேட்டதும், சிலிர்ப்புடன் விவரித்தார்.

‘‘சொல்லிக்கொடுக்க ஒருவர் இருந்தால்தான் ஒன்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதும், குருவிடமிருந்துதான் கற்க வேண்டும் என்பதும் உலக நியதி. இந்தத் தலத்தில் கும்பம் தரை தட்டியபின், ஈஸ்வரனால் புதிய உலகம் உருவானது. பிரளயத்துக்குப் பின் உலகம் அப்படி உருவானதும் சிவபூஜை செய்வது எப்படி என்று எவருக்கும் தெரியாத நிலை. ஆக, முதல் குருவாக இருந்து, கும்பத்துக்குள் இருந்து சிதறிய எஞ்சிய அமிர்தத்தையும், உடைந்த கும்பத்தையும் புதிய கும்பத்தில் இட்டு, லிங்கம் பிரதிஷ்டை செய்து ஈஸ்வரன் தன்னைத் தானே பூஜை செய்துகொள்கிறார். பிரளயம் தோன்றியபோது, அதாவது ஊழிக்காலத்தில் முதலில் தோன்றியவராதலால், ஈசனை ‘ஊழி முதல்வர்' என்பர். அதற்கு இன்னொரு பொருள் ஆதி (துவக்கம்). ஆதியாகத் தோன்றிய கும்பேஸ்வரரானதால் ஆதிகும்பேஸ்வரர் எனப்படுகிறார்’’ என்றவர், இத்தலத்தில் மும்மூர்த்திகளின் சாந்நித்தியமும் ஒன்றிணைந்து திகழ்வதையும் விவரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்