ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 29 வரை ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

தையும் திட்டமிட்டுச் செய்பவர்களே!

சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால், பண வரவு உண்டு. அரசியல் வாதிகளின் தொடர்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிட்டும். விலகிச் சென்ற சொந்தங்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள். பழைய வழக்கில் வெற்றி உண்டு.
ராகு 5-ல் தொடர்வதால், மன இறுக்கம், எதிர்மறை எண்ணம், வீண் டென்ஷன் வந்து போகும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

சுக்ரனும் புதனும் வலுவாக இருப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். ராசிக்கு 8-ல் சனி தொடர்வதால் அவநம்பிக்கை, பிடிப்பற்ற போக்கு ஏற்படும். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

25-ம் தேதி வரை 7-ல் செவ்வாய் தொடர்வதால், வாழ்க்கைத் துணைக்கு இடுப்புவலி, வேலைச்சுமை உண்டு.

வியாபாரத்தில், பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர் களை அனுசரித்துப் போகவும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு வந்தாலும் சமாளிப்பீர்கள். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

தொலைநோக்கு சிந்தனையால் இலக்கை எட்டிப் பிடிக்கும் தருணம் இது.


நன்றி மறவாதவர்களே!

ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு.

சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால், புது பதவிக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால், சகோதரர்கள் மதிப்பார்கள். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். ராகு, கேது, சனி மற்றும் குருவின் போக்கு சாதகமாக இல்லாததால் தாயாருக்கு மருத்துவச் செலவு வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது குறித்து ஆலோசிப்பீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சில நேரங் களில் மனக்குழப்பத்துக்கு ஆளாகி விரக்தியாகப் பேசுவீர்கள்.

வியாபாரத்தில், அதிரடி மாற்றங்கள் செய்து அதீத லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அதை திறம்படச் சமாளிப்பீர்கள். கலைத் துறை யினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும்.

போராட்டங்களைக் கடந்து முன்னேறும் காலம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்