முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னாதிபதி பாப கிரகங்களுடன் (வெப்ப கிரகங்கள்)இணைந்து இருந்தால் உடல் வலிமை குன்றிவிடும். சனி, செவ்வாய், சூரியன், தேய்பிறைச் சந்திரன், ராகு, கேது ஆகியவை பாப கிரகங்கள் என்கிறது ஜோதிடம். இவற்றின் சேர்க்கையால் (ஏதாவது ஒன்றோடு இணைந்தாலும்) தேகத்தின் சுகாதாரம் பாதிக்கப்படும்.

பரிணாம வளர்ச்சியில் 60 வயது வரை சுகாதாரம் படிப்படியாக வளர்ந்து நிறைவை எட்டிவிடும். அறுபதுக்குப் பிறகு அதன் வளர்ச்சி குன்றிவிடும். சிறு வயதில், பரிணாம வளர்ச்சியில் வளர வாய்ப்பு இல்லாதபடி பாப கிரகங்கள் இடையூறு விளைவிக்கும். அப்படி, சுகாதாரத்தை இழக்கும்போது வாழ்வில் இன்பத்தைச் சுவைக்க முடியாது. பொருளாதாரம், படிப்பு, பதவி, மனைவி, மழலைகள், வீடு, வாகனம் எல்லாம் நிறைவை தந்தாலும், உடல் சுகாதாரம் வீழ்ச்சியடைந்தால் மகிழ்ச்சியை உணர முடியாமல் செய்துவிடும். மகிழ்ச்சியை உணர்வதற்கு உடல் சுகாதாரமும் உள்ளத்தெளிவும் அடிப்படைத் தகுதிகள்.

இன்றைய நாளில் உடல், மனம் இந்த இரண்டின் சுகாதாரம் போதுமான அளவை எட்டாத இளைஞர்கள், மருந்துக்கும் கட்டுப்படாது என்பதை அறிந்தும் திருமணத்தில் இணைந்து, விவாகரத்தைச் சந்திக்கிறார்கள். ஆனால், ஜோதிட பிரபலங்கள் இது குறித்து ஆராயாமல் அலட்சியப்படுத்திவிட்டு, இணை சேர்த்து, விவாகரத்தைச் சந்திக்கவைப்பது தகாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்