கலகல கடைசி பக்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கவலையே இல்லாத மனிதன் யார்?தெனாலி , ஓவியம்: மகேஸ்

ரு ராஜாவோட சபையில, “கவலையில்லாத மனுஷன்னு யாராவது இருக்க முடியுமா?”ன்னு ஒருமுறை பேச்சு வந்துது. சபையில ஒருத்தர் சொன்னார்... “எனக்குக் கவலைங்கிறதே இல்லைன்னு யாராவது சொன்னா, அது ஜமுக்காளத்துல வடிகட்டின பொய்! சின்னதோ, பெரியதோ... எல்லாருக்கும் ஏதாவது ஒரு கவலை இருந்தே தீரும்!”

“உண்மைதான்! நிறைய காசு பணம் உள்ளவங்க, சொத்து சுகம் உள்ளவங்களுக்குக்கூட ஏதாவது ஒரு கவலை இருக்கிறதைப் பார்த்திருக்கேன்”னார் இன்னொருத்தர்.

“ஏதாவது ஒரு கவலையா? நல்லாச் சொன்னீங்க! பணம் காசு, சொத்து சுகம் உள்ளவங்களுக்குத்தான் ஏகப்பட்ட கவலை இருக்கும். சொல்லப்போனா, அந்தப் பணம் காசை நல்லபடியா வெச்சுக் காப்பாத்தணு மேங்கிறதுதான் அவங்களோட முதல் கவலையா இருக்கும்!”னு சொல்லிட்டுச் சிரிச்சார் வேறு ஒருத்தர்.

இப்ப ராஜாவுக்கு ஒரு கவலை வந்துட்டுது. தன் ஆட்சியில, தன் நாட்டு மக்கள் எல்லோரும் கவலையில்லாம இருக்காங்களாங்கிற கவலைதான் அது! இதை நேரிலேயே போய்ப் பார்த்து வரலாம்னு, ஒரு நாள் மாறுவேஷத்துல நகர்வலம் கிளம்பினான் ராஜா. அவன் பார்த்தவரையில எல்லார் வீட்டுலயும் ஏதாவது ஒரு துயரம், ஒரு கவலை இருக்கவே செஞ்சுது. பார்த்துக்கிட்டே போனான் ராஜா. கவலையில்லாத மனுஷன் ஒருத்தனாவது கண்ணுல படமாட்டானான்னு அவனுக்குள்ளே ஒரு ஆதங்கம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்