விழாக்கள் விசேஷங்கள்...

மஹா சிவராத்திரி விழா!

சிவத்தொண்டும் இறைப்பணியும் நிறைந்த தேசமாகத் திகழ்ந்தது, பண்டைய தொண்டை மண்டலம். இந்தப் பகுதியை அரசாண்ட மன்னர்கள் சிவநேசச் செல்வர்களாகத் திகழ்ந்ததுடன், தங்களின் தேசம் செழிக்கவும் மக்கள் மனதில் தெய்விகம் தழைத்தோங்கவும் 108 சிவாலயங்களை அமைத்ததாகச் சொல்கின்றன புராணங்கள். அவற்றுள் 51-வது சிவத்தலமாக திகழ்கிறது, சென்னை அம்பத்தூர் காமராஜர் பகுதியில் உள்ள அருள்மிகு சிவகாமி அம்மையுடன் கோயில் கொண்டிருக்கும் அம்பலவாணர் திருக்கோயில்.

சர்வரோக பரிகார ஸ்தலமாகத் திகழும் இந்தத் திருக்கோயிலில், வரும் 7.3.16 (மாசி-24) அன்று, மஹா சிவராத்திரி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. சிவனருள் வேண்டும் பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றுச் சிறக்கலாம்.

கல்பூண்டியில் சிவராத்திரி!

கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் காசிக்கு சென்ற பெரியோர்களால், அங்கிருந்து பெறப்பட்ட அற்புத சிவலிங்கம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்