நாரதர் உலா

பழநியில் தொடரும் பகல் கொள்ளை!

‘தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி...’ என்று பாடியபடியே நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

‘‘என்ன நாரதரே, பாட்டு பலமாக இருக்கிறதே! கோயில்களில் தேவார பதிகங்களைச் சரியாக ஓதுவதில்லை என்று ஏதேனும் பிரச்னையை முன்வைக்கப்போகிறீரா?’’ என்று கேட்டோம்.
‘‘பதிகங்களை ஓதுவதில் பிரச்னை இல்லை.

பதிகங்களைப் பாடுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள ஓதுவார்களுக்குத்தான் பிரச்னை!’’

‘‘அடடா! மனம் உருக இறைவனின் சந்நிதி யில் திருமுறை ஓதும் பாக்கியம் பெற்றவர்கள் அல்லவா ஓதுவார்கள்! அவர்களுக்கு யாரால், என்ன பிரச்னை?’’

‘‘ஓதுவார்களுக்கு மட்டுமின்றி வாத்தியக் கலைஞர்களுக்கும் பிரச்னைதான். ஆரம்பக் காலத்தில் தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் போன்ற ஆதீனங்கள் திருமுறைகளை ஓதும் ஓதுவார்களுக்காகப் பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்தன. பிறகு, தமிழக அரசின் இசைக் கல்லூரியில் திருமுறைகளும் பாடமாகச் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மிகவும் குறைவு. தேர்ச்சி பெற்று வரும் சிலருக்கும், ஒரு சில அதிகாரிகளை ‘கவனித்தால்’தான் கோயில்களில் வேலை கிடைக்கும் என்கிற நிலை. இதனால், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி இருக்கும் அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அப்படியே மேலதிகாரி களுக்குப் பணம் கொடுத்து வேலையில் சேர்ந் தாலும், அவர்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது’’ என்றார் நாரதர்.

‘‘புரியவில்லையே சுவாமி, திருமுறைகளை ஓதுவதைவிட வேறு பணிகளும் அவர்களுக்குத் தரப்படுகிறதா என்ன?’’

‘‘அறநிலையத் துறையில் 30 சதவிகிதத்துக்கும் மேலாகப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. போதுமான பணியாளர்களை நியமிக்காமல், கடந்த ஆண்டு அறநிலையத்துறை ஓர் உத்தரவு பிறப்பித்ததாம். அதன்படி, ஓதுவார்கள் திருமுறை களை ஓதும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நூலகத்தைப் பார்த்துக் கொள்வதுடன், கோயில் அலுவலகத் தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லவேண்டும். அவர்கள் மட்டுமல்ல... இசைக் கலைஞர்கள், பரிசாரகர்கள் என ஒவ்வொருவருக்குமே அவர்களுக்கான பணியைத் தவிர, கூடுதல் பணிகளைச் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதனால் பலரும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்’’ என்றார் நாரதர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்