கலகல கடைசி பக்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சாமிக்கு சக்தி உண்டா?தெனாலி, ஓவியம்: மகேஸ்

 “கோயில் நகைகள் திருட்டு” என்று காலை பேப்பரில், தலைப்பெழுத்துச் செய்தியை உரக்கப் படித்த அப்பா, “என்னவோ போ! தன் நகைகளைத் திருட்டுப் போகாம காப்பாத்திக்கவே சாமியால முடியலைன்னா அது நம்மளை மட்டும் எங்கேருந்து காப்பாத்தப் போகுது?” என்று அலுத்துக் கொண்டார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா சிரித்தார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னே நீ வெச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்டை உன் பிள்ளையாண்டான் பிடுங்கிக்கிட்டு ஓடினானே… வேடிக்கை பார்த்துட்டுதானே இருந்தே? ‘உன் கையிலிருந்த பிஸ்கட்டைக் காப்பாத்திக்கவே உனக்குத் துப்பில்லையே, என்னை மட்டும் எப்படி வெச்சுக் காப்பாத்தப் போறே?’ன்னு நான் கேக்கலாமா?” என்றார்.

“என்னப்பா… எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறீங்க? அவன் என் பையன். அவன்தான் தின்னா என்ன, நான் தின்னா என்ன?” என்றார் அப்பா.

“அது மாதிரிதான் இதுவும். நகையைத் திருடினவன் நமக்குத்தான் திருடன். கடவுளைப் பொறுத்தவரைக்கும் அவனும் அவரோட குழந்தைதான்.”

“என்னப்பா சொல்றீங்க… தப்பு பண்றவன் கடவுளோட குழந்தையா?” என்றார் அப்பா பொறுக்கமாட்டாமல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்