முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வெப்ப கிரகம் - இதை ஜோதிடம் பாப கிரகம், சுஷக கிரகம், அசுப கிரகம் என்ற பெயர்களில் குறிப்பிடும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, தேய்பிறை சந்திரன், வெப்ப கிரகத்துடன் இணைந்த புதன் ஆகியவை வெப்ப கிரக வரிசையில் இணைந்துவிடும். வெப்ப கிரகத்தின் பலன்களும் இணைந்துவிடும்.

குரு, பாப கிரகத்துடன் இணையாத சுக்கிரன், பாப கிரகத்துடன் இணையாத புதன், வளர்பிறை சந்திரன் ஆகியோர் சுப கிரகங்கள். இதை தட்ப கிரகங்கள் என ஜோதிடம் குறிப்பிடும். வெப்பம், தட்பத்தின் இணைப்பில் காலத்தின் மாறுபாடு உருவாகும். காலம் என்று ஒன்று தனியாக இல்லை. வெப்ப-தட்பத்தின் இணைப்பில் தோன்றும் மாறுபாடு காலமாக உருப்பெறுகிறது. உலகமே வெப்ப-தட்பத்தின் கலவையில் உருப்பெற்றதுதான். உலகம் ஒடுங்கும் வேளையில் நீர்மயமாகத் தோற்றமளிக்கும். அதை ‘ப்ரளயம்’ அதாவது முடிவு என்று சொல்லும். எல்லா ஜீவராசிகளும் பரம்பொருளில் இணையும்போது, ப்ர-லயம் (ப்ரளயம்) உருவாகிறது. அந்த தட்பத்தில் சூரியனின் வெப்பம் இணையும்போது பிரபஞ்ச சிருஷ்டி ஆரம்பமாகிறது.

பரம்பொருள் முதலில் நீரைத் தோற்றுவித்தார். அதில் வீர்யத்தை (ப்ரபஞ்ச வடிவில் தென்பட வேண்டிய விதையை) சேர்த்தார். அந்த விதை வெப்பம். இவற்றின் சேர்க்கையில் பிரபஞ்சம் உருவானது என்ற புராண விளக்கம் உண்டு (அபரவ ஸஸர் ஜாதௌதாஸீ வீர்யமபாஸ்ருஜத் தடண்ட மபவத் ஹெமம் ஸஹஸ்ராம் சுசமப்ரபம்). தட்பவெப்பத்தின் இணைப்பில் உருவா னது பிரபஞ்சம் என்கிறது சாஸ்திரம் (அக்னி ஹோமாத்பகம் ஜகத்).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்