பாதை இனிது... பயணமும் இனிது..! - 37

சாமானியரும் சாதனையாளரும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

வாழ்வின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு ஒருவரைப் பெரியவர் என்றும், சிறியவர் என்றும் பிரிப்பது உலக வழக்கம்.

பெரிய தன்மை என்பது, உடலின் வயதை மட்டும் வைத்துக் கணக்கிடப்படுவதல்ல. அறிவின் முதிர்ச்சி, மனதின் மலர்ச்சி ஆகியவற்றால் வாழ்க்கையில் ஒருவர் செய்த செயற்கரிய செயல்களை வைத்தே ஒருவரை சமூகம் பெரியவர் என்று போற்றுகிறது. அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதியும் உடையவர்களால்தான் செயற்கரிய செயல்களைச் செய்ய முடியும். உலகில் எத்தனையோ கோடி மக்கள் பிறந்து வாழ்ந்த சுவடு தெரியாமல் இறந்துகொண்டிருக்க, சிலரது சாதனைகள் மட்டும் கால வெள்ளத்தில் அழியாத கல்வெட்டுகளாய்ப் பதிந்திருக்கின்றன. உலக நன்மையின் பொருட்டு உழைத்த அத்தகைய சாதனையாளர்களை உலகம் என்றென்றும் நன்றியோடு நினைவுகூர்கிறது.

சாமானிய மனிதருக்கும் சாதனையாளருக்கும் உள்ள வேற்று மையை திருவள்ளுவர் ‘பெருமை’ என்னும் அதிகாரத்தில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சாதனையாளரைத் தனித்துக் காட்டுவது, அவரது உள்ளத்தில் கிளர்ந்தெழும் ஊக்கமே ஆகும். அந்த ஊக்கம் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தளராது; எத்தகைய துயரங் களைக் கண்டும் அஞ்சாது.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

- என்று மகாகவி பாரதியார் முழங்கியதைப் போன்று அஞ்சா நெஞ்சர்களாய், குறைவற்ற ஊக்கம் உடையவர்களாய் அவர்கள் புதுமை படைப்பார்கள். தணியாத ஊக்கமே உள்ளத்தில் நெருப் பாகக் கனன்று, சாதனையாளர்களின் இருண்ட பாதையில் ஒளி யைப் பாய்ச்சுகிறது.

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (திருக்குறள்: 971)


‘ஊக்க மிகுதியே ஒருவனுக்கு ஒளியாகும். அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர் வாழலாம் என்று எண்ணுவதே ஒருவனுக்கு இழுக்கு’ என்கிறார் திருவள்ளுவர். உலகில் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிதான் பிறக்கிறார்கள். சாதனையாளர்களுக்கும் அதே இருபத்து நான்கு மணி நேரம்தான். அவர்களுக்குத் தனியாகக் கொம்பு எதுவும் முளைத்துவிடுவதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்