வழக்குகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

சுந்தரபாண்டிய சாஸ்தாம.மாரிமுத்து

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் செய்துங்கநல்லூர்.  முற்காலத்தில் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வழியில் தங்குவதற்கான அன்னதான மண்டபம் ஒன்று இங்கிருந்தது என்கிறார்கள். பக்தர்கள் அங்கு தங்கியிருந்து உணவு சமைத்து உண்டு, களைப்பாறிவிட்டுச் செல்வார்களாம். அதாவது, செய்து உண்டு தங்குவதற்கு உகந்த நல்லூர் என்பதால் ‘செய்துங்கநல்லூர்’ என்று பெயர்வந்ததாகச் சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

சரித்திரம் சார்ந்த இன்னொரு காரணமும் உண்டு. அதாவது  முன்னர், ‘முறம்புநாட்டு திருவரங்க சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயருடன் திகழ்ந்த இந்த பகுதி, செய்துங்க மகாராஜா என்ற அரசனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததாம். அவரது பெயராலேயே செய்துங்கநல்லூர் என்ற பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

எது எப்படியோ, இன்றைக்கும் திரள் திரளாக தன்னை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் அல்லவை நீக்கி நல்லவை அருளும் நல்லூராகவே திகழ்கிறது இவ்வூர். அதற்குக் காரணம், இவ்வூரின் ஒரு பகுதியான ஐயனார்குளப்பட்டியில் அருளாட்சி நடத்தும் சுந்தரபாண்டிய சாஸ்தா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்