நாரதர் உலா

‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி ஆசிரியர் இலாகா பேசிக்கொண்டு இருந்த நேரம் பார்த்து, அறைக்குள் பிரசன்னமானார் நாரதர்.

‘‘சென்றமுறை வந்தபோது வடபழநி வேங்கீஸ்வரர் கோயில் நிர்வாகத்தில் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளதாகச் சொன்னீர்களே, அதுபற்றி விசாரித்தீர்களா?’’ என்று கேட்டோம்.

‘‘அதுகூட செஞ்சி கோதண்டராமர் கோயிலைப் போலவே கோயில் சொத்துக்கள் பற்றிய பிரச்னைதான். 2.2.16 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் வேங்கீஸ்வரர் கோயில் பரம்பரை அறங்காவலர் நீக்கம் தொடர்பான செய்தியைப் பார்த்ததுமே பாரம்பர்ய கலாசார மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த சாஜாகுணா என்பவர் நம்மைத் தொடர்புகொண்டார்.

நாம் அவரை நேரில் சந்தித்தபோது, ‘வேங்கீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 27 ஏக்கர் நிலமும், 100 அடி சாலையை ஒட்டி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ஒரு தெப்பக்குளமும் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தெப்பக்குளத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இப்போது தெப்பக்குளமே காணாமல் போய்விட்டது. தெப்பக்குளம் இருந்த இடத்தில் இப்போது வணிக வளாகங்களும் உணவு விடுதிகளும் வந்துவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்