ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மார்ச் 15 முதல் 28 வரை‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

ற்பூர புத்தி உள்ளவர்களே!

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், எதிரும் புதிருமாக எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். என்றாலும், 8-ல் நிற்கும் சனி உங்களை அடிக்கடி கோபப்பட வைப்பார். உங்கள் திறமைகள் யாவும் மங்கிவிட்டதாக நினைக்க வைப்பார். ஆனால், சுக்ரன் சாதகமாக இருப்ப தால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டு. கல்யாண முயற்சிகள் கூடி வரும். வாகனப் பழுது நீங்கும்.

பழைய கடன் பற்றிய கவலைகள் விலகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகம் அடைவீர்கள். 5-ல் ராகு நீடிப்பதாலும், உங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 12-ல் நுழைந்ததாலும், பிள்ளைகளின் தேர்வு, உயர்கல்வி பற்றிய பயம் வந்துபோகும்.

5-ல் குரு நிற்பதால், பிள்ளைகளின் வழியில் நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புது முயற்சிகளை அதி காரிகள் ஆதரிப்பார்கள். கலைத் துறையினரே! எதிர்பார்த்த
நிறுவனத்தில்  இருந்து வாய்ப்பு வரும்.

போராடினாலும் வெற்றி பெறும் நேரம் இது.


சுய கௌரவம் பார்ப்பவர்களே!

உங்கள் பிரபல யோகாதிபதிகளான சூரியனும் புதனும் தொடர்ந்து சாதகமாக இருப்பதால், தொடங்கிய வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பி.க்களும் ஆதரவாக இருப்பார்கள்.

வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், திருமணம் கூடி வரும். சொத்து விஷயம் நல்ல விதத்தில் முடியும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். என்றாலும், சனியும் 7-ல் நீடிப்பதால், தூக்கமின்மை, கடன், வழக்கு குறித்து கவலை, தொண்டைப் புகைச்சல், அடி வயிற்றில் வலி வந்து நீங்கும். வாழ்க்கைத் துணைக்கு முதுகு, இடுப்பு வலி வரக்கூடும்.

ஆனால், சுக்ரன் சாதகமாக இருப்ப தால், மகிழ்ச்சி தங்கும். சர்ப்ப கிரகங் களின் சஞ்சாரம் சரியில்லாததால், பிள்ளைகளால் செலவுகள் வரும். சிலர் உங்களைத் தவறான போக்குக்கு தூண்டுவார்கள் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.

வியாபாரம் சூடு பிடிக்கும். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

விவேகமான முடிவுகளால் முன்னேறும் தருணம் இது.


இரக்க குணம் அதிகமுள்ளவர்களே!

ராகு 3-ம் வீட்டிலும், சனியும், செவ்வாயும் 6-ம் இடத்திலும் தொடர்வதால், உங்களின் சாதனைப் பட்டியல் நீளும். சவாலான விஷயங் களைக்கூட எளிதில் முடிப்பீர்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும்.

வாழ்க்கைத் துணையின் வழியில் உதவிகள் உண்டு. வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் மதிப்பார்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலர் வீடு மாறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். டி.வி, ஃப்ரிட்ஜ், எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கு வீர்கள்.  குரு 3-ல் தொடர்வதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

மறதியால் விலை உயர்ந்த பொருட் களை இழக்க நேரிடும். சூரியன் 10-ல் தொடர்வதால், புது வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தி யோகத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். அதிகாரிகளிடமும் சக ஊழியர் களிடமும் கவனமாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்குப் பல இடங்களில் இருந்தும் பாராட்டு கிடைக்கும்.

பிரபலங்களின் உதவியால் முன்னேறும் காலம் இது.


புதுமை விரும்பிகளே!

குரு 2-ல் தொடர்வதால், இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். செவ்வாய் 5-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், செல்வாக்கு கூடும்.

பிள்ளைகளின் திறமைகளை இனம்கண்டறிந்து வளர்ப்பீர்கள். வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும். பூர்வீக சொத்தைச் சீர் செய்வீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடு களில் செல்வதால், உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு.

பயணங்களால் நிம்மதி உண்டாகும். சூரியன் 9-ல் நிற்பதால், வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். தந்தை உங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என வருந்துவீர்கள். சனி 5-ல் நீடிப்பதால், மன இறுக்கம் உண்டாகும். கடன் பிரச்னை தலைதூக்கும். பாவ கிரகங்களான ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லா ததால், எந்த நேரம் எந்த ஆபத்து நேருமோ, பெயர் கெட்டுவிடுமோ என அச்சப்படுவீர்கள்.

யாரையும் கடுமையாகத் தாக்கிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள்.

கடந்த கால சுகங்களை நினைத்து மகிழும் வேளை இது.


தொடங்கியதை முடிக்காமல் தூங்காதவர்களே!

சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். நண்பர்களால் பயன் அடைவீர்கள். உறவினர்களின் ஆதரவு பெருகும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கல்யாணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.

வாகனத்தைச் சரி செய்வீர்கள். ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்தி ருப்பதால், அடுத்தடுத்து அலைச்சலும் எதிர்பாராத செலவுகளும், கொஞ்சம் சோர்வும், களைப்பும் வந்து போகும்.

அர்த்தாஷ்டமச் சனி  தொடர்வதால், கால் வலி, கழுத்து வலி, மூச்சுத் திணறல் வந்து போகும். அக்கம் பக்கம் வசிக்கும் நபர்களோடு அனுசரித்துப் போகவும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சில காரியங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. செவ்வாய் 4-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் பலனடைவீர்கள்.

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்குள்ளேயே குருவும் ராகுவும் நிற்பதால், ஒருவித தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள், நிம்மதியின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்து செல்லும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் நிலவும். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் மோதல்கள் வந்து போகும். உத்தியோகத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர் களின் நட்பால் சாதிப்பீர்கள்.

யதார்த்தமாக நடந்துகொள்ள வேண்டிய நேரம் இது.


இளகிய மனம் கொண்டவர்களே!

சனியும் செவ்வாயும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால், எதையும் தாங்கும் மன வலிமை கிடைக்கும்.

அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். சிறுகச் சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டுமனை வாங்க முயற்சி செய்வீர்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதி கரிக்கும்.பங்குகளில் லாபம் ஏற்படும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதா யம் உண்டாகும். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு.

12-ல் குரு மறைந்திருப்பதால், ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். திடீர் பயணங்கள் உண்டாகும். சூரியன் 7-ல் நின்று உங்களைப் பார்ப்பதுடன் ராகு  12-ல் நிற்பதால், உடல் உஷ்ணம், அடிவயிற்றில் வலி வந்து போகும். எதையோ இழந்ததைப் போன்று ஒருவித கவலை வந்து போகும். சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால், தொண்டைப் புகைச்சல், கழுத்து வலி, வாகனம் மற்றும் மின்னணு, மின்சார சாதனங்களில் பழுது வந்து போகும்.

கணவன் - மனைவிக்குள் அனுச ரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் இங்கிதமாகப் பேசி வாடிக்கை யாளர்களைக் கவருவீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறு வீர்கள். புதிய சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். பாராட்டுகளும் கிடைக்கும்.

விடாமுயற்சியால் வெற்றி பெறும் தருணம் இது.


மனசாட்சியின்படி நடப்பவர்களே!

குருவும் ராகுவும் வலுவாக அமர்ந் திருப்பதால், சவாலான விஷயங் களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுடைய அறிமுகம் கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர் களால் உதவிகள் உண்டு.

வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் செல்வாக்கு உயரும்.  பங்குகளின்  மூலம் பணம் வரும். சூரியன் 6-ல் வலுவாக அமர்ந் திருப்பதால், அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த மனக் கசப்பு நீங்கும். பழைய கடன் பிரச்னை யில் ஒன்று தீரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். புதிய வேலை கிடைக்கும். 2-ம் வீட்டிலேயே செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், வீடு, மனை வாங்குவது மற்றும் விற்பதில் இருந்த பிரச்னைகள் தீரும்.

உடன் பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பாதச் சனி தொடர்வதால், வீண் செலவு, ஒருவித பயம், சின்னச் சின்ன தடைகள் வந்து போகும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தி யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

நீண்ட நாள் கனவுகள் நனவாகும் காலம் இது.


கரடுமுரடான பாதையைக் கடந்தவர்களே!

புதன் 5-ல் நிற்பதால்,  அனுபவ அறிவு உங்களை முன்னேற்றும். வளைந்துபோகக் கற்றுக்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் குறையும். நட்புகளால் பலனடைவீர்கள்.

சூரியன் 5-ல் நிற்பதால், பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்த கவலைகள் வந்து போகும். பூர்விக சொத்துக்காகப் போராட வேண்டாம். குருவும் ராகுவும் 10-ல் நீடிப்பதால், தாழ்வு மனப்பான்மை, விபத்து, கோபம், வேலைச்சுமையால் மன இறுக்கம் வந்து போகும். இழந்த வாய்ப்புகளை நினைத்துச் சில நேரங்களில் பெருமூச்சு விடுவீர்கள்.
சுக்ரன் சாதகமாக இருப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சி பெற்று நிற்பதால், பிரச்னைகளைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். 4-ல் கேது இருப்பதால், சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் மாட்டிவிடுவார்கள்.
 
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். வேலை யாட்கள், வாடிக்கையாளர்களால் மறை முகத் தொந்தரவுகள் வரக்கூடும். உத்தி யோகத்தில் அதிகாரிகளை கலந்து  ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டாம். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகள் எல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள்.

விட்டுக்கொடுத்ததை மீட்டெடுக்கும் வேளை இது.


கொண்ட கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே!

உங்கள் பாக்கியாதிபதி சூரியன் 4-ல் கேந்திர பலம் பெற்று நிற்பதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கு ஏற்ப சொத்து அமையும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும்.

புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர் பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு அதி கரிக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 4-ம் வீட்டிலேயே புதனும் சாதகமாக இருப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். உங்களுடைய தனித்திறமைகளை வளர்ப்பீர்கள். குரு 9-ல் தொடர்வதால், பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். கேது 3-ம் வீட்டிலேயே வலுவாக அமர்ந்திருப்பதால், சந்தைப் பங்குகள் லாபம் தரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், சேமிப்புகள் கரையும். என்றாலும் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், சகோதர வகையில் நன்மை கிட்டும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக்கொள்வீர்கள். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முன்னுரிமை தருவார்கள். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும்.

முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் வேளை இது.


முன் வைத்த காலை பின் வைக்காதவர்களே!

சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். வாகனம் வாங்குவீர்கள். குரு 8-ல் நிற்பதால், முன் கோபத்தைத் தவிர்க்கப் பழகுங்கள். யாரேனும் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் சாதகமாக இல்லாததால், நரம்புக் கோளாறு, வேலைச்சுமை, நெஞ்சு வலி வந்துபோகும். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. யோகாதிபதி புதனும் சாதகமாக இருப்பதால், இதமாகப் பேசி சில கடினமான வேலைகளை முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு.

தந்தை வழி சொத்தை போராடிப் பெறுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். செவ்வாயும், ராசிநாதன் சனியும் லாப வீட்டில் தொடர்வதால், சகோதரருக்கு வேலை அமையும். வெகு நாட்கள் கனவாக இருந்த ஆசை இப்போது நிறைவேறும். வியாபாரத்தில் அதிரடிச் சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தி யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி, அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பையும் பாராட்டையும் பெறுவீர்கள்.

நயமாகப் பேசி வெற்றி பெறும் தருணம் இது.


முற்போக்கு சிந்தனை உள்ளவர்களே!

புதனும் சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், மன நிம்மதி, மகிழ்ச்சி கிட்டும். ஓரளவு பணவரவும் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

பிள்ளைகள் நீண்டநாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். நவீன ரக சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால், பார்வைக் கோளாறு, பல் வலி, வீண் விவாதம் வந்துபோகும். சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். செவ்வாயும், சனியும் ராசிக்கு 10-ல் நிற்பதால், கௌரவப் பதவி தேடி வரும்.

வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ராசியிலேயே கேதுவும், 7-ல் ராகுவும் தொடர்வதால், முன்கோபம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

கூடுதல் நேரம் உழைத்து முன்னேறும் காலம் இது.


தான, தர்மங்களை விரும்பிச் செய்பவர்களே!

ராசியை விட்டு சூரியன் இன்னும் நகராததால், அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவீர்கள். சுக்ரன் தொடர்ந்து சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த பணம் வரும்.

ரசனைக்கேற்ற வீடு, இடம் அமையும். கல்யாண முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளுக்குத் தகுந்த ஆலோசனை கூறி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவு வீர்கள். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந் திருப்பதால், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுடைய நட்பு கிடைக்கும். வேலை மாற நினைப்பீர்கள்.

ஆடை, ஆபரணங்கள் சேரும். ராகு 6-ல் வலுவாக நீடிப்பதால், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் மற்றும் பல வீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சி கள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால், நிம்மதி இழப்பீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.

பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். புதன் சாதகமாக இருப்பதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம்கோணாமல் நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டப்படும்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick