கேள்வி பதில்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கடமையைச் செய்யாமல் கடவுள் அருள் கிடைக்குமா?

? மகா சிவராத்திரியை ஒட்டி இரவு வழிபாட்டுக்குச் செல்லலாம் என்று நண்பனை அழைத்தேன். அவனோ, பக்தி எல்லாம் மனதில் இருந்தால் போதும். ராத்திரி விழித்து இருந்தால்தான் அருள் கிடைக்கும் என்பதெல்லாம் கிடையாது. ஆத்மார்த்தமா ஒரு தடவை அவர் நாமத்தைச் சொல்லி வழிபட்டாலே அருள் கிடைக்கும். மற்றதெல்லாம் வீண் என்கிறான். மனிதனுக்கென்று சில அறங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதைச் செய்யாமல் கடவுள் அருள் கிடைக்குமா?

- சொ.இசக்கியப்பன், செகந்திராபாத்


முதல் கோணம்

பொறுப்பு இல்லாத சுதந்திரமாக வாழ விருப்பம். சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டதிட்டத்தை ஏற்கமாட்டோம். பொறுப்பின் சுமையை சுமக்கமாட்டோம். உடல் சுகாதாரமும், உள்ளத் தெளிவும் வேண்டும். ஆனால், அவற்றை ஏற்க எந்தவொரு முயற்சியும் எடுக்கமாட்டோம். வெளியே இருக்கும் ஒரு சக்தியோ, கடவுளோ அல்லது மகானோ, நம் வேண்டுகோளை எதிர்பார்க்காமல் தன்னிச்சையாக முன்வந்து நமக்கு உடல் சுகாதாரத்தையும் உள்ளத் தெளிவையும் தந்து உதவவேண்டும் என்று நினைப்போம்.

? நீங்கள் சொல்லும் அளவுக்கெல்லாம் தற்போது வழிபாடு மலிந்துவிடவில்லை. மிகைப்படுத்துகிறீர்களோ எனத் தோன்றுகிறது.


எதையும் மிகைப்படுத்தவில்லை. யதார்த்த நிலையையே விளக்குகிறோம். படுக்கை அறையில் படுத்துக்கொண்டே சின்னத் திரையில் கடவுள் தீபாராதனையைப் பார்க்க இயலும். அது நிஜமல்ல நிழல்தான் என்றாலும், நமது விருப்பத்தை அந்த தரிசனம் பூர்த்தி செய்யவேண்டும். அப்படியே, மகான்களின் அன்றாட அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்போம், அவர் பூஜிப்பதையும் பார்ப்போம். நிழல் வடிவிலான அந்த தரிசனமும் நமக்குத் தன்னிச்சையாக அருள்செய்ய வேண்டும். கடவுளும் மகான்களும் தங்கள் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ள, நமக்கு அருள்வது கடமையாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்