மனிதனும் தெய்வமாகலாம்! - 38

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

குருநாதா் ஒருவா் சீடா்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார்.

“அரசமரம் ஒன்றில் இரண்டு பறவைகள் இருந்தன. அவற்றில் ஒன்று கிளைக்குக் கிளை தாவி, பழங்களைத் தின்றது. மற்றொன்றோ அனைத்தை யும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தது” என ஆரம்பித்து விவரிக்கத் தொடங்கினார்.

சென்ற இதழில், ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறிய விவரங்களையும், அவர் மேற்கோள் காட்டிய கதையையும் படித்தோம்; அந்த கதையின் மூலம் ஜீவாத்மா பழங்களைத் தின்றது; பரமாத்மா பார்வையாளராக இருந்தது என்று அவர் விளக்கியிருந்ததையும் படித்தறிந்தோம் அல்லவா? அந்தக் கதையில் இருந்து துவங்கி வேதாந்த தத்துவங்களை சீடர்களுக்கு விரிவாக விளக்கிக் கூறினார் குருநாதர்.

ஒரு மாணவனுக்கு மட்டும் சந்தேகம் முளைத்தது. “குருநாதா! ஒரே மரத்தில் இருக்கும் இரண்டு பறவைகளில் ஒன்று மட்டும் பழத்தைத் தின்றது; அகப்பட்டுக் கொண்டது. அடுத்ததோ, எதையும் செய்யாமல் அங்கேயே இருந்தது என்றீா்கள். ஒரே இடத்தில் இருக்கும் இரண்டில் ஒன்று சிக்கும்; மற்றொன்று சிக்காது என்றால் அது எப்படி?” என வாதாடத் தொடங்கினான்.

குருநாதா் பலவிதங்களில் சொல்லியும் சீடன், அவற்றில் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. உணவு நேரம் நெருங்கியது. அன்று நெய் வடிய வடிய சா்க்கரைப் பொங்கல் போட்டார்கள். வாதம் செய்த சீடனும் நன்றாக வளைத்துக் கட்டினான். அனைவரும் கையலம்பப் போனார்கள். கைகளை சீயக்காய்த்தூள் போட்டு நன்றாக நெய்ப் பிசுக்கு போகும்படியாக அலம்பினார்கள். வாதம் செய்த சீடனும் அலம்பினான். அப்போது அவனுடைய கைகளில் சீயக்காய்த் தூளை அள்ளிக் கொட்டி “இதைப்போட்டு வாயையும் நன்றாக நெய்ப் பிசுக்குப் போக அலம்பு!” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்