உதவலாம் வாருங்கள்!

வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

சித்தர்கள் வழிபாடு, மூலமந்திர விளக்கங்கள் கொண்ட புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகிறது. எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்கள். அல்லது அவை கிடைக்கும் இடம் குறித்த தகவலைத் தாருங்களேன்.

- எஸ்.கவிதா, ஸ்ரீரங்கம்


‘பந்தம் அகற்றும் அநந்த குணப் பரப்பும்’ என்று தொடங்கும் பாடல் காஷ்யப முனிவர் அருளிய காரியஸித்தி மாலையில் உண்டு. இதன் மூலம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. அந்த நூல் எவரிடமேனும் இருந்தால் தந்து உதவுங்களேன்.

- வி.வெங்கடராமன், செகந்திராபாத்


சக்தி அம்சங்களில் ஒருதேவி சாகம்பரி. விவசாயம் செழிக்கவும், காய்-கனி விளைச்சல் அதிகரிக்க வும் இவளை வழிபடவேண்டும் என்று பெரியவர் ஒருவர் மூலம் கேள்விப்பட்டேன். இந்த தேவியின் திருவுருவப்படம் மற்றும் வழிபாட்டு முறைகள் அறிந்தவர் கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.சோமசுந்தரம், அம்பாசமுத்திரம்

எங்கள் குலதெய்வம் அசிதாங்க பைரவர். வீட்டில், தை மாத அஷ்டமி தினத்தில் சுவற்றில் மஞ்சள் மற்றும் குங்குமத்தால் சூலக் குறி வரைந்து, படையலிட்டு வழிபட்டு வருகிறோம். இவருக்கென்று தனிக் கோயில் எங்கு உள்ளது. விவரம் அறிந்தவர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.

- கே.சி.பரமசிவம், கடலூர்


திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல்களின் மூலமும் உரையும் கொண்ட புத்தகம் தேவைப்படுகிறது. கிடைக்கும் இடம் அறிந்தவர்கள், தகவல் தாருங்களேன். அல்லது எவரிடமேனும் அந்த புத்தகம் இருந்தால் தந்து உதவிசெய்யுங்கள்.

- ஆர்.கருப்பையா, தேனி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்