ஆலயம் தேடுவோம்

வானம் பார்த்திருக்கும் மானம்பாடி மகேஸ்வரன்!எஸ்.கண்ணன்கோபாலன்

‘தொழுதகை துன்பம் துடைப்பான்’ என்றும், ‘அழிவிலா ஆனந்த வாரி’ என்றும், ‘அழிவதும் ஆவதும் கடந்தோன்’ என்றும் மாணிக்கவாசகப் பெருமான் பாடிப் பரவிய ஐயன் சிவபெருமான், ‘பூமியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகிறோம் அவமே’ என்று தேவர்களும் ஏங்கித் தவிக்கும்படியாக இந்த பூமியில் காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து கோயில் கொண்டு அருளாட்சி நடத்தி வருகிறார். மகரிஷிகளாலும் முனிவர்களாலும் வழிபடப் பெற்ற ஆலயங்களுடன், மன்னர்கள் பக்தியுடன் நிர்மாணித்த எண்ணற்ற ஆலயங்களும் ஒருகாலத்தில் பக்திப் பயிர் செழிக்கச் செய்து, மனிதர்களின் வாழ்க்கையை நிம்மதியும் சந்தோஷமும் நிரம்பியதாகத் திகழச் செய்திருந்தன.

இதோ, இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் மானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயிலும் அத்தகைய ஆலயங் களுள் ஒன்றுதான்! பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனால் நிர்மாணிக்கப் பெற்று எழிலார்ந்த தோற்றத்துடன், ஐயனின் பூரண அருள் திறம் கொண்டு விளங்கி, மனிதர்களின் வாழ்க்கையை விளக்கமுறச் செய்த ஆலயம் இது. ஒருகாலத்தில் அருளின் பிறப்பிடமாகவும், கலைகளின் உறைவிடமாகவும் திகழ்ந்த ஐயனின் இந்த ஆலயம் இன்றைக்கு வானம் பார்த்த நிலையில், மிகப் பரிதாபமாக இருப்பது கண்டு, மனம் பதறித் துடித்தோம்.

கூரைகள் சரிந்து, புதர்கள் மண்டி, வெட்ட வெளியாக இருந்த கோயிலுக்குள், ஒரு சிறிய கொட்டகையில் ஐயன் தரிசனம் தருகிறார். அந்தக் கொட்டகையிலேயே அம்பிகை சௌந்தர நாயகி, விநாயகர், முருகப் பெருமான் ஆகியோரும் திருக்காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் கலைநயம் மிகுந்த பல அழகிய சிற்பங்கள் மண்ணில் கிடந்த கோலத்தைக் கண்டு கண்கள் கலங்கின. தாங்கள் ஒரு வேள்வியைப்போல் பார்த்துப் பார்த்து வடித்த தெய்வத் திருமேனிகள் இப்படி வெயிலில் காயவும், மழையில் நனையவுமான நிலையில் இருக்கும் கோலத்தை விண்ணில் இருந்து பார்க்கும் அந்தக் கலைஞர்களின் ஆத்மா எப்படியெல்லாம் பரிதவிக்கும்! நாம் கொஞ்சமேனும் இதை நினைத்துப் பார்த்தால், ஆலயம் இந்த அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு இனியும் பொறுத்திருப்போமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்