பன்னிரு வரங்கள்... பன்னிருகை வேலவனின் பன்னிரு தலங்கள்!

‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’  என்றும், ‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ என்றும் மனிதப் பிறவியின் உயர்வை சிறப்பாகப் போற்றியுள்ளார்கள் அருளாளர்கள். காரணம், பிறப்புகளில் தலையாயது மனிதப் பிறப்பே!

 படைப்பில், வேறு எந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சிந்திக்கும் அறிவு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. எனவே சிந்திக்கத் தெரிந்த மனிதன், தன் பகுத்தறிவைக் கொண்டு தமது வாழ்வை தெய்வ சிந்தனையில் செலுத்தி, அதன் மூலம் இறையருளைப் பெறலாம். வாழ்வை அன்பு மயமாக ஆக்குவது இறையருட் சிந்தனையால் எளிதில் இயலும். அதுவே பிறப்பின் பயனாகும்.

இன்றைக்கு, அறிவியலில் மக்கள் வெகுவாக முன்னேறினாலும், வாழ்க்கையில் பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். மனித குலத்தின் சிரமங்களையும், துன்பங்களையும், வருத்தங்களையும் நீக்க காலந்தோறும் அருளாளர்கள் பலரும் தோன்றி நமக்கு வழிகாட்டி வருகிறார்கள். அவர்கள் அருளிய பக்தி இலக்கியங்கள் யாவும் நமது வாழ்வைச் செம்மைப்படுத்த வந்தவையே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்