முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்துக்கு உடையவன், 6-ம் வீட்டின் அதிபதி, 2-ம் வீட்டின் அதிபதி ஆகிய மூவரும் பாப கிரகத்தின் சேர்க்கை பெற்று (அசுப கிரகம், வெப்ப கிரகம்) 7-ம் வீட்டில் இருக்க நேர்ந்தால், அந்த ஜாதகன் மாற்றான் மனைவியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புவான்.

லக்னம் - அவன் பிறந்தவேளை (அது அவன்).  6-ம் வீட்டுக்கு உடையவன் அவனுக்கு ஒத்துழைக்காதவன் மட்டுமல்ல, எதிரிடையான பலனையும் ஏற்கவைப்பவன். 2-ம் வீடு அவனது குடும்பம். அதற்கு உடையவன் இணைந்து செயல்படுபவன். ஆனால், இந்த மூவருடனும் அசுப கிரகம் சேர்ந்து இருப்பதால், அவரவரின் தனித்தன்மை இழக்கப்பட்டு, அசுப கிரகத்தின் இயல்பு அவர்களில் இணைந்துவிடுகிறது. அவர்கள் அனைவரும் 7-ம் வீட்டில் இருப்பதால், அந்த வீட்டின் தரத்தை (தாம்பத்தியத்தை) ஒட்டுமொத்தமாக ஒற்றுமையோடு சேர்ந்து பாதித்துவிடுகிறார்கள். அதனால், மனைவியிடம் திருப்தி அடையாமல், பண்பையும் கலாசாரத்தையும் அலட்சியப்படுத்தி, அறத்துக்குப் புறம்பான வழியில் மாற்றான் மனைவியிடம் ஈடுபடும் துணிவை ஏற்படுத்தி விடுகிறது. ஆக, இரண்டு குடும்பங்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு தனது பெருமையை இழந்துவிடுகிறான்.

லக்னம் - அவன்; 7-ம் வீடு - அவன் மனைவி; 2-ம் வீடு - அவனது குடும்பம். ஆறாம் வீட்டின் அதிபதி அவனுக்கு இழுக்கை ஏற்படுத்துபவன். அத்துடன் அசுப கிரகச் சேர்க்கை இந்த மூவரின் தரத்தையும் இழக்கச் செய்கிறது. இது 7-ம் வீட்டில் நிகழ்ந்தபடியால், கைப்பிடித்தவளுக்கு துரோகம் செய்வதுடன், மாற்றான் மனைவியை விரும்புவதன் மூலம் அவளுடைய நல்ல குடும்பத்தையும் களங்கப்படுத்த வைத்துவிடுகிறது. மாற்றான் மனைவியின் ஜாதகத்தில் தென்படும் புனர்பூ தோஷமும் (கைப்பிடித்த கணவனை அலட்சியப்படுத்தி விட்டு மாற்று புருஷனோடு இணைவது), இவன் செய்யும் தவறுக்கு ஒத்துழைக்கும்.

மனைவி இருக்க, விருப்பப்படி மாற்றான் மனைவியை நாடும் எண்ணம் எல்லோருக்கும் இருக்காது. அதுபோல், இவன் விரும்பும் மாற்றான் மனைவிக்கு ‘புனர்பூ’ தோஷம் இல்லாமல் இருந்தால், அவள் இவனுக்கு இடமளிக்கமாட்டாள். இவனும், இவன் விரும்பும் மாற்றானின் மனைவியும் அறத்துக்குப் புறம்பாகச் செயல்படும் துணிச்சல் உடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அமைப்பு இருக்கும் புருஷ ஜாதகத்தைக் காணும் ஜோதிட பிரபலங்கள், அவனுக்கு வரப்போகும் மனைவியின் ஜாதகத்தை ஆராய வேண்டும். அளவு கடந்த காமமும், புருஷனை திருப்திப்படுத்தும் ஆர்வமும் இருக்கும் ஜாதகத்தை இணைத்தால் குடும்பம் இழுக்குக்கு ஆளாகாமல் தப்பிக்க இயலும்.

புருஷ ஜாதகத்தில் மாற்றான் மனைவியை ஏற்பான் என்பதை யும், பெண் ஜாதகத்தில் ‘பூனர்பூ’ தோஷத்தையும் ஆராயாமல் 10 பொருத்தங்களைக் கணக்கிட்டு இணை சேர்த்துவைக்கும் ஜோதிட பிரபலங்களின் விளையாட்டு காரியத்தால், விவாகரத்துகள் இன்று பெருகிவிட்டதைக் காணமுடிகிறது. திருடனின் காலில் விழுந்து இழந்த பொருளைத் திருப்பிக்கொடு என்று மண்டியிட்டால், தர மாட்டான். அத்துடன் நில்லாமல், போலீஸில் அடையாளம் காட்டிவிடுவாரோ என்ற பயத்தில், காலில் விழுபவனை அழிக்கவும் துணிந்துவிடுவான். அருளுக்கு பதிலாக ஆபத்து நேர்ந்து விடுவதும் உண்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்