காந்தள் மலர்!

ஆஹா... ஆன்மிகம்!

1. இலக்கியங்கள் போற்றும் மலர்களில் முக்கியமானது காந்தள். குளோரிசா சூப்பர்பா என்பது இதன் தாவரவியல் பெயர்.

2. ஆலகால விஷம் தோன்றிய பாற்கடலில் அமிர்தமும் கிடைத்தது போல், விஷத்தன்மை கொண்ட காந்தள் செடியின் சில பாகங்கள் மருத்துவத் தன்மையுடன் திகழ்கின்றன.

3. முருகப்பெருமான் காந்தள் மலரை விருப்பத்துடன் ஏற்கிறார். ஆகவே அவரை, `காந்தட் கண்ணியன்' என்று போற்றும் நக்கீரர், ‘காந்தட் பெருங்கண்ணி மிலைந்த சென்னியன்’ என்று பாடுகிறார்.

4. மலேய மக்கள் இந்த மலரை ‘சீனர்களின் பல வண்ண விளக்கு' என்று சிறப்பிக்கிறார்கள். உருது மொழியில் ‘அக்னி சிகா’ என்று அழைக்கிறார்கள். இதற்கு, ‘கோடல்’என்றும் ஒரு பெயர் உண்டு. ‘கோடல்’ பூக்கள் நிறைந்த இடமே ‘கோடம்பாக்கம்’ என்று பெயர்
பெற்றது எனவும் கூறுவர்.

5. கார்த்திகை மாதம் அதிகம் பூப்பதால் கார்த்திகைப் பூ என்றும், மழை பொழிந்ததும் தோன்றுவதால், தோன்றிப்பூ என்றும் அழைக்கப்படுகிறது. காக்கை மூக்குப்பூ, கலப்பைக் கிழங்குப் பூ ஆகிய பெயர்களும் உண்டு.

6. வேலியில் பூத்திருக்கும் காந்தள் மலர்களை, பெண்கள் ஏற்றி வைத்த கார்த்திகை விளக்குகளுடன் ஒப்புமைப்படுத்தி கூறுகிறது கலித்தொகை. ‘பெண்களின் கைவிரல்களைப் போன்றது’ என்றும் இலக்கியங்கள் சிறப்பிக்கின்றன.

7. இலக்கியங்களில் குருதிப்பூ என்று குறிப்பிடப்படுகிறது. பாறையில் இப்பூக்கள் கிடக்கும் காட்சி, போர்க் களத்தில் குருதிப் பூக்களைச் சொரிந்தது போல் இருப்பதாக புறநானூறு வர்ணிக்கும்.

8. ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலர், தமிழ்நாடு அரசின் மலர் ஆகிய சிறப்புகளும் இந்தப் பூவுக்கு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்