செல்வ யோகம் தரும் லக்ஷ்மி குபேர வழிபாடு!

குபேர யோகம் அருளும் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்க.புவனேஸ்வரி

வேத காலத்தில் நைமிசாரண் யத்தில் இருந்த மகரிஷிகள் பல விரதங்கள் மற்றும் பூஜைகளைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார் கள். அப்போது அங்கே வந்த திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி, ‘`வரப்போகும் கலியுகத்தில் செல்வம் இருந்தால்தான் பூஜை வழிபாடுகள் சாத்தியப்படும். அந்த செல்வத்தைப் பெற உகந்த வழிபாடு லக்ஷ்மி குபேர வழிபாடுதான்’’ என்றவர் தொடர்ந்து,

‘‘கலியுகத்தில் ஏகாதசி விரதம், ரதசப்தமி விரதம், பௌர்ணமி விரதம், சிவராத்திரி விரதம், கார்த்திகை விரதம் என்று பல விரதங்கள் உலக மக்களால் அனுஷ்டிக்கப்படும். ஆனால், அந்த விரதங்களை அனுஷ்டிக்க பொருள் வசதி வேண்டும். அந்தப் பொருள் வசதி பெறுவதற்கான விரதம்தான் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம். இந்த பூஜையைச் செய்பவர்கள் பெரும் நிதியைப் பெறுவார்கள்’’ என்றார். மகரிஷிகள், ‘‘நாரதரே! நீங்கள் சொல்வது எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. விரதங்களையும், பூஜைகளையும் அனுஷ்டிக்க பொருள் கட்டாயம் தேவையா?’’ என்று கேட்டனர்.

‘`ஆம். கலியுகத்தில் தண்ணீர்கூட காசு கொடுத் தால்தான் கிடைக்கும் என்ற நிலை வரப்போகிறது. பொருள் இருந்தால்தான் அருள் தேடமுடியும். அந்தப் பொருளையும் ஒருவன் தர்மத்துக்கு மீறாத வகையில் அடையவேண்டும். அப்போதுதான் பொருளுடன் அருள் தேடி புண்ணியம் பெறவும் முடியும். தீபாவளி அன்று செய்யவேண்டிய ஸ்ரீலக்ஷ்மிகுபேர பூஜைதான் இதற்குச் சிறந்த வழி. வடக்கு திசைக்கு அதிபதியான குபேரனே அனைத்து செல்வங்களையும் அருள்புரிபவன். மகாலக்ஷ்மி தேவியை பூஜித்து சங்க நிதி, பதும நிதி உள்ளிட்ட நவநிதிகளையும் வரமாகப் பெற்றவன். கலியுகத்தில் தீபாவளி நன்னாளில் ஸ்ரீலக்ஷ்மிகுபேர பூஜை செய்வதால் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்