‘வேண்டும் வரம் கிடைக்கட்டும்’

க்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 4.10.16 அன்று மாலை தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பொதுவாக, சிவாலயங்களில் சுவாமியும் அம்பாளும் தனித்தனியாகத்தான்  வீற்றிருப்பார்கள். ஆனால், ஒரே இடத்தில் இருவரும் வீற்றிருப்பது இத்திருக்கோயிலின் சிறப்பம்சங்களில் ஒன்று. கன்னிப் பெண்கள், தொடர்ந்து 9 பெளர்ணமி நாட்களில் இங்கு வந்து நெய் விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட வாசகி ஆர்.வனஜா, “சக்தி விகடன் பல ஊர்க ளிலும் திருவிளக்கு பூஜையை நடத்தி வருகிறது. எங்க ஊர்ல எப்போ நடத்துவாங்கனு ஆர்வமா எதிர்பார்த்துக் காத்துக் கிட்டு இருப்பேன். இந்த முறை எங்க ஊர்ல நடக்கவும், ஆர்வத்தோடு வந்து கலந்துக்கிட்டேன். என் குடும்பத்தைக் காத்தருள்வாய் தாயே என்ற கோரிக்கையோடு இந்தத் திருவிளக்கு பூஜையில் கலந்துக்கிட்ட எனக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன் கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்