உங்கள் வீடு தேடி... அம்பாள் அருள் புடவை!

ம்பாள் அருள் புடவைக்கு வாசகியரிடம் அமோக வரவேற்பு. சென்ற இதழில், ஆன்மிகத் துணுக்குகள் அனுப்பி வைக்கும்படியும், அவற்றில் சிறந்ததான 25 துணுக்குகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை எழுதியனுப்பிய 25 வாசகியருக்கு, காவேரிப்பாக்கம் அருள்மிகு காமாட்சியம்மனுக்கு பூஜையுடன் சமர்ப்பிக்கப்பட்ட  மங்கல புடவைகள் அனுப்பிவைக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட வாசகியருக்கு திருவருள் பரிசாக அனுப்பவேண்டிய புடவைகள், 20.10.16 வியாழக்கிழமை அன்று, காவேரிப்பாக்கம் அருள்மிகு பஞ்சலிங்கேஸ்வரர் திருக் கோயில் - ஸ்ரீகாமாட்சியம்மன் சந்நிதியில் விசேஷ பூஜையுடன் சமர்ப்பிக்கப்பட்டன. அம்பாள் பிரசாதமான அந்த அருள் புடவைகள் தேர்வு செய்யப்பட்ட வாசகியருக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதுவரையிலும் 50 வாசகியர் அம்பாள் அருள் புடவை பெற்றுள்ளனர். புடவை கிடைக்காத வாசகியருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த இதழிலும் தேர்வு போட்டி உண்டு. அதற்கான விதிமுறைகளும், கூப்பனும் எதிர்ப்பக்கத்தில் உள்ளன. நீங்களும் கலந்துகொள்ளுங்கள்; உங்கள் வீடு தேடி வரும் அம்பாள் அருள் புடவை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்