குகன் வழிபட்ட குகநாதீஸ்வரர்

ன்னியாகுமரி ரயில்நிலையம் அருகில், மரங்களும் செடிகளும் அடர்ந்து நிற்கும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது, அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் இறைவன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், இக்கோயில் கருவறை குகை போன்று அமைத்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். இறைவி பார்வதி. இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதராகக் காட்சியளித்த இக்கோயிலின் பரிதாப நிலையை, கன்னியாகுமரி ரயில்நிலையப் பணியாளர் ஒருவர் பார்த்து மனம் வெதும்பி, தன் ரயில் நிலைய சகாக்களோடு சேர்ந்து அவற்றை வெட்டிச் சுத்தப்படுத்தி, கோயிலில் பூஜை நடப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். அதன் பிறகே, பக்தர்கள் அங்கு வந்து போகத் தொடங்கினர்.

குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான சிவலிங்கம் இந்தத் திருக்கோயிலில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலின் உட்பிராகாரத்தில் நவகிரகங்கள் மற்றும் கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சண்டிகேஸ்வரர், துர்கை  ஆகிய பரிவார மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன.

கன்னியாகுமரி பகவதியம்மன் திருக்கோயிலின் தலபுராணத்தில் குகன் (முருகன்) தன் தந்தையை (சிவன்) வழிபட்ட இடம் குகநாதீஸ்வரர் கோயில் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்