மிருதங்கத்துக்காக ஒரு கோயில்!

வீயெஸ்வி

ஷைலேஸ்வரி தரிசனம்

மீபத்தில், மிருதங்க வித்வான் காரைக்குடி மணி, அலைபேசியில் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல், புருவம் உயரச் செய்தது. இதுவரை கேள்விப்படாத, வியப்பூட்டும் தகவல் அது!

‘மணலில் இருந்து தயாரிக்கப்பட்ட கருவி’ என்று நேரடி பொருள் கொண்டிருக்கும் இசைக் கருவியான மிருதங்கத் துக்கு என்று பிரத்யேகமாக அமைந்திருக்கும் ‘மிருதங்க ஷைலேஸ்வரி' கோயில் பற்றிய தகவலே அது.

‘‘கே
ரளாவில், தலசேரிக்கும் கண்ணனூருக்கும் இடையில், காடுகள் நிரம்பிய பகுதியில், மலை மீது கம்பீரமாக அமைந் திருக்கிறது மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயில். வேறு எங்குமே இதுபோல் மிருதங்கத்துக்கென்று கோயில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கோயிலின் பின்னணிக் கதை - ஸ்தல வரலாறு - சுவைமிக்க ஒன்று.

மேல் உலகில் இருந்து மிருதங்கம் பூமிக்கு இறங்கி வந்தபோது,  ரூபம் அற்ற அரூபியாக தியானத்தில் இருந்த பகவதி ஷைலேஸ்வரி, அதனைத் தன் கைகளால் தாங்கிப் பிடித்தாளாம். அப்போது எழுந்த சத்தம் மலையின் மீது எதிரொலித்ததாம். அதிலிருந்து அந்தப் பகுதி, ‘முழக்கண்ணு’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ‘எதிரொலிக்கும் மலை’ என்பது பொருள். தொலைவிலிருந்து மலையின் முழு நீளத்தையும் அண்ணாந்து பார்த்தால், அச்சு அசலாக மிருதங்கத்தின் வடிவிலேயே அது அமைந்திருப்பது தெரியும். இன்னொரு தகவலும் உண்டு. மிருதங்கத்தை அம்பாள் தன் கைகளில் தாங்கியபோது, மணலில் குழி ஒன்று உருவானது. இன்றைக்கும் அந்தக் குழியை தரிசிக்க முடியும்.

கேரளா வர்மா பழசி ராஜாவின் குடும்பத்துக்குக் குலதெய்வம் இந்தக் கோயில். பத்து தலைமுறைகளுக்கு முன்பு இந்தக் குடும்பம் பகவதிக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என்று தீர்மானித்தது. எனவே, அரூபியாக இருந்த அம்மன், ஸ்வரூபியாக - அந்த நாளிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானம் கொண்ட - பஞ்சலோக விக்கிரகமாக மாறினாள்!

அடர்த்தியான காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருக்கிறது, ஷைலேஸ்வரி கோயில். இருந்தாலும், போகும் பாதை சீரானதாகவே உள்ளது. உள்ளே நுழைந்ததும், சற்றுக் கரடு முரடான கற்கள் மீது நடந்து செல்லவேண்டும். மழையின் காரணமாக, பிராகாரங்கள் சேறும் சகதியுமாக இருக்கின்றன. கவனமாகக் கால் பதித்து நடக்க வேண்டும்.

கடந்த காலங்களில், இந்தக் கோயிலில் ஆச்சரியம் நிறைந்த சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். உதாரணமாக, பஞ்சலோகத்தால் ஆன ஷைலேஸ்வரியின் சிலையைத் திருடிச் செல்வதற்கு மூன்று முறை முயற்சிகள் நடந்து, ஒவ்வொரு முறையும் கண்களுக்குப் புலப்படாத ஏதோ ஓர் சக்தி, இந்தத் திருட்டு முயற்சிகளை முறியடித்ததாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்