வெடிச் சத்தம் ஒலிக்கும் வெள்ளக்கோயில்!

லோ.பிரபுகுமார்

கொங்கு மண்டலத்தில் உள்ள இருபத்து நான்கு நாடுகளில் ஒன்று ‘காங்கேய நாடு’. கோவை - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளக் கோயில் என்ற ஊரில் அமைந்திருக்கிறது வீரகுமாரசுவாமி திருக்கோயில். அக்காலத்தில் காங்கேய நாட்டுக்கு உட்பட்டதாக இருந்த இவ்வூர், அப்போது வெள்ளைக்கோயில் என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் அது மருவி ‘வெள்ளக் கோயில்’ என்றானதாகவும் செவிவழித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சித்தர் சபை

ராஜகோபுரவாயில் என்று அழைக்கப்படும் திருக்கோயிலின் முதன்மை நுழைவாயில், கோயிலின் வடக்குத் திசையில் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் பெரும்பாலும், ராஜ கோபுரத்தில் இருந்து பார்த்தோமே யானால், மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறை நன்றாகத் தெரியும். ஆனால், இக்கோயிலின் ராஜகோபுரத்தில் இிருந்து பார்த்தால், கருவறை தெரியாது.

மூலவரின் கருவறை வடக்கு நோக்கியே அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்மண்டபங்களின் கிழக்குப்புறம் ஐம்பூதங்களின் சிலைகள் கம்பீரமாக வீற்றிருக்கின்றன. முன் மண்டபத்தில் இருந்து உள்நோக்கிப் பார்த்தால், கன்னிமார் சந்நிதியும் பதினெண் சித்தர்கள் சிலைகளும்  கண்ணுக்குப் புலப்படும். இந்தப் பதினெண் சித்தர்கள் எழுந்தருளியிருக்கும் இடம்  ‘சித்தர்  சபை’ என அழைக்கப் படுகிறது. தலவிருட்சம் - கறுக்கட்டான் மரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்