புற்றில் குடிகொண்ட ஏழுமலையான்!

லோ.பிரபுகுமார்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருக்கோயில். காவிரி ஆற்றின் வடகரையில்  அமைந்திருக்கும் இதை ஸ்ரீசக்கரத்தாழ்வார் சிறப்பு வழிபாட்டுத் தலம் என்றும் பெருமாள் கோயில் என்றும் பக்தர்கள் பக்தியோடு அழைக்கிறார்கள்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மோகனூர் அருகில் உள்ள வாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் திருப்பதி  ஏழுமலையான் மீது அளவுகடந்த பக்தி கொண்டு சிறு வயது முதல் திருமலையில் உள்ள ஏழுமலையானை வருடந்தோறும் நேரில் சென்று வணங்கி வந்துள்ளார். வயது முதிர்ச்சியின் காரணமாக,  அவர் திருப்பதி செல்ல முடியவில்லை. தன்னால் ஏழுமலையானை நேரில் சென்று  வணங்க முடியாத நிலையை உணர்ந்து, அருகில் உள்ள  காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு ஆற்றில் இறங்கப் போனார். அப்போது மிகுந்த பிரகாச ஒளியுடன் சர்வ வல்லமையும் மிகுந்த திருப்பதி ஏழுமலையான் அவர் முன்பாக நேரில் காட்சி தந்து, “நான் ஆற்றின் அருகில் உள்ள புற்றில் குடிகொண்டு இருக்கிறேன். அதனால், நீ அங்கே நேரில் வந்து வணங்கி கேட்கும் வரத்தை  இங்கேயே கேள். அதை நான் உனக்கும் இந்த இடத்தை நாடிவந்து வணங்குபவர்களுக்கும் வழங்குவேன்’’ என்றாராம்.

இதைக் கேட்ட அந்த முதியவர் அருகில் உள்ள புற்றைத் தேடிக் கண்டுபிடித்து வணங் கினார். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த பக்தர்கள்  பலரும் இங்கு வந்து வழிபாடு செய்யத் தொடங்கினர். இங்குள்ள  பெருமாளின் மகிமையை உணர்ந்த  ராமச்சந்திர நாயக்கர்  என்னும் அரசர் தனது ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயிலைக் கட்டியதாக இதன் தல வரலாறு கூறுகிறது. இந்த இடத்தில் புற்று இருந்ததை மெய்ப்பிக்கும் விதமாக, கோயிலின் உட்புறத்தில் சிமெண்ட் தரை மற்றும் பளிங்குக் கற்களையும் தாண்டி, இப்போதும் புற்று மண் உருவாகின்றது. அதை பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்குகின்றனர்.  பிரசாதமாக வழங்கப்படும் இந்த புற்று மண், ‘நோய் தீர்க்கும் அமிர்தம்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்