ராசிபலன் - நவம்பர் 8 முதல் 21 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

பொறுமையுடன் இருந்து சாதிக்கும் நேரம் இது.

எல்லோருக்கும் நல்லது நினைப்பவர்களே!


சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு புது வேலை அமையும். ராசிநாதன் செவ்வாய் 10-ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். புதிய அணுகுமுறையால் சொத்துப் பிரச்னை தீரும். சகோதரர்களின் அரவணைப்பு அதிகரிக்கும்.

சூரியன் 16-ம் தேதி முதல் 8-ல் அமர்வதால், குடும்பத்தில் அமைதி திரும்பும் என்றாலும் சனியுடன் சேர்வதால் பல், காது வலி, இருமல் வந்து போகும். பிள்ளைளை அனுசரித்துச் செல்லவும். அரசு காரியங்கள் தாமதமாகும். புதனும் 8-ல் மறைந்திருப்பதால், வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. அஷ்டமத்துச் சனி தொடர்வதால், சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில நேரங்களில் உங்களை கடிந்து பேசினாலும் அன்பாக நடந்துகொள்வார். கலைத் துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும்.


விவேகமான முடிவுகளால் முன்னேறும் நேரம் இது.

உள்ளத் தூய்மை கொண்டவர்களே!


சப்தமாதிபதி செவ்வாய் உச்சமாகி 9-ம் வீட்டில் வலுவாக நிற்பதால், தைரியமாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவர். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், பழைய நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

நீச்சமாகி 6-ல் நிற்கும் உங்கள் சுகாதிபதி சூரியன் 16-ம் தேதி முதல் 7-ல் அமர்வதால், கோபம் குறையும். தடைப்பட்ட அரசு காரியங்கள் விரைந்து முடியும். என்றாலும் சூரியன் சனியுடன் சேர்வதால், வாழ்க்கைத்துணைக்கு முதுகு வலியும், முழங்காலில் அடிபடவும்கூடும். ராசிநாதன் சுக்கிரன் சனியை விட்டு விலகி 8-ல் மறைந்ததால், ஆரோக்கியம் சீராகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைந்து முடியும். கண்டகச் சனி தொடர்வதால், எதிலும் ஈடுபாடற்ற நிலை, தலைச்சுற்றல் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினரே! விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்