நவகிரக வழிபாடு - எளிய பரிகாரங்களுடன்...

நவகிரக ரத்னஜோதி சந்திரசேகர பாரதி

ம் ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந் திருக்கும். யாருக்குமே ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. சில கிரகங்கள் பலமாகவும், சில கிரகங்கள் பலவீனமாகவும் அமைந்திருக்கும்.

பலம் பெற்ற கிரகங்களும், ஆதிபத்திய விசேஷமுள்ள கிரகங் களும், சுபர் சாரம் (நட்சத்திரம்) பெற்ற கிரகங்களும் ஜாதகருக்கு விசேஷமான நற்பலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை. கிரகங்கள் பலம் பெறாமல் அமைந்திருக்கும் நிலையில், இன்னல்களும் ஏற்படுவது உண்டு. அப்படியான இன்னல்களைக் குறைத்துக் கொள்ளவே பரிகாரங்கள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்களும் வலுப் பெற்றிருந்தால், வலுப்பெற்ற கிரகத்தின் தசை, புக்தி, அந்தரம், சூட்சும அந்தரம் ஆகிய காலங்களில் சுப பலன்கள் நிச்சயமாக நடக்கும். அதாவது குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிபத்திய விசேஷப்படியும் அவரது காரகத்துவப் படியும் நல்ல பலன்கள் உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்