கல்யாண வரம் தரும், பெளர்ணமி விளக்கு பூஜை!

சிவகாசியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் வெம்பக்கோட்டை. அருள்மிகு மீனாட்சியம்மையுடன் சொக்கலிங்க ஸ்வாமி கோயில் கொண்டிருக்கும் இந்த ஊரை, காசிக்கு நிகராகக் கொண்டாடுகிறார்கள் சிவபக்தர்கள்!

சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. பின்னர் வந்த காலங்களில் - சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி மேட்டுக்காடு, நத்தத்து மேடு என்னும் குறுநிலங்களாகப் பிரிந்திருந்தது. அத்தருணம் நத்தத்துமேடு என்னும், இத்தலம் அமைந்த பகுதியினை செம்புலிங்கராஜா என்னும் குறுநில மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குப் பின், அவரது தத்துப்பிள்ளை களான கண்டியச் சேதுபதியும், பாண்டியச் சேதுபதியும் இப்பகுதியை ஆட்சிபுரிந்தனர்.

கனவில் தோன்றிய மீனாட்சியம்மை!

அவர்கள் இருவரும் ஒவ்வொரு நாளும் குதிரையில் பயணப்பட்டு மதுரை சென்று, அங்கு அருள்புரியும் மீனாட்சி அம்மனைத் தரிசித்த பின்பே காலை உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியொரு நாள், இருவரும் மதுரைக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்க, செல்லும் வழியில் இருந்த அர்ஜுனா நதியில் வெள்ளம் கரைபுரண்டது. பல நாழிகை காத்திருந்தும் வெள்ளம் வடியாததால்,  மனம் சோர்வுற்ற  மன்னர்கள் இருவரும் களைப்பில், அருகிலிருந்த மரத்தடியில் படுத்து உறங்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்