திருவேங்கடநாதன் திருவருளாலே...

கான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப் பெற்றவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை எல்லாம் உடனுக்குடன் அருள் புரிபவர் சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாள்.

ஒருகாலத்தில் அவருடைய வழிபாடுகள் நின்று போயின. இந்நிலையில், பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எல்லாம் அகற்ற மறுபடியும் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டுவிட்டார்.

திருவேங்கடநாதரின் அருளாடல்களைப் பற்றியும் அவருக்கு ஓர் ஆலயம் இல்லாமல் இருப்பது பற்றியும், ‘சித்தமெல்லாம் சித்தமல்லி’ என்று சக்தி விகடனில் தொடராக வெளியிட் டோம். தொடர்ந்து கோயில் கட்டுவதற்கான திருப்பணிகளும் தொடங்கப்பட்டன.

ஒரு சிறிய கொட்டகைக்குள் இருந்தபடி பக்தர்களுக்கு அருள்புரிந்த திருவேங்கடநாத பெருமாளின் திருக்கோயில் திருப்பணிகள் தங்குதடை இல்லாமல் நடைபெற்றதே, பெருமாள் நிகழ்த்திய அற்புதங்களால்தான்!

திருப்பணிகள் பற்றி சுந்தரநாராயணனிடம் பேசியபோது...

‘‘சுமார் நாலு வருஷத்துக்கு முன்புதான் திருவேங்கடநாத பெருமாளைப் பற்றி எங்கள் குடும்பத்துக்குத் தெரிய வந்தது. எங்கள் முன்னோரால் வழிபடப் பெற்ற பெருமாளுக்கு
நான்தான் கோயில் கட்ட வேண்டும் என்று ஸ்ரீராகவேந்திரர் உத்தரவு கொடுத்திருப்பதாக பத்மா மாமி கூறினார். அதற்கான பணத்துக்கெல் லாம் பெருமாளே வழி செய்து தருவார் என்றும் அவர் கூறியதால், நம்பிக்கையுடன் திருப்பணிகளைத் தொடங்கிவிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்