ராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி!

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கு திசையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பட்டீஸ்வரம்.

இந்தத் தலத்தில் சிவனைக் குறித்து பராசக்தி தவம் புரிந்தபோது, காமதேனு தனது மகளான ‘பட்டியை’ தேவிக்கு உதவி செய்யும் பொருட்டு இவ்விடத்துக்கு அனுப்பினாள். அந்தப் பட்டி, தன் வாழ்நாள் முழுவதும் ஈசனைப் போற்றி, மனமுருகி சேவைகள் பல புரிந்து மோட்சத்தைப் பெற்றாள். பட்டி என்பவள் ஈஸ்வரனைச் சரணடைந்த இடமென்பதால், பட்டீச்சுரம் என்றானது;  இங்கே கோயில் கொண்டிருக்கும் தேனுபுரீஸ்வரருக்கும் ‘பட்டீச்சுரர்’ என்றும் திருப்பெயர் ஏற்பட்டது. பட்டீச்சுரம் என்பது மருவி, காலப்போக்கில் பட்டீஸ்வரம் ஆனது என்கிறார்கள்.

ராமர் பிரதிஷ்டை செய்த சிவபெருமான் சோழ, பல்லவ, நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக் கோயில் இது. 4 வாயில்களும், 7 கோபுரங்களும், ஞானவாவி, ராமர் தீர்த்தம், தபஸ் கேணி, தெப்பக் குளம், காயத்ரி குளம் உட்பட 5 தீர்த்தங்களையும் கொண்ட திருக்கோயில் இது.

கருவறையில் பட்டீச்சுரர் இருக்க, கிழக்கு திசையில் ஞானாம்பிகை, மேற்கில் முருகன், வடக்கில் துர்கை, தெற்கில் விநாயகர் என நான்கு தெய்வங்களின் சந்நிதிகளையும் நான்கு திசைகளில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ராமர், விஷ்ணுவின் அவதாரம் என்றபோதிலும், மூன்று மகாக்ஷேத்திரங்களில் மட்டும், ராமரே சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் ஒன்று, இந்தப் பட்டீஸ்வரம் திருக்கோயில். வாலியை மறைந்திருந்து அழித்து, யுத்த தர்மத்தை மீறியதால், சாயஹத்தி தோஷம் பெற்ற ராமபிரான், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திருக்கோயிலில் சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். தான் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு அபிஷேகம் செய்ய தன்னுடைய வில்லைக் கொண்டு ‘கோடி தீர்த்தம்’ உருவாக்கியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்