பிள்ளை வரம் அருளும் பாலைவனேஸ்வரர்

க.புவனேஸ்வரி

ஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திலிருந்து சுமார் 1.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருபாலைவனநாதர் திருக்கோயில். அப்பரால் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் 27 தலங்கள் சோழவள நாட்டில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று இந்த பாலைவனேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

இத்திருத்தலத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம். அதாவது, ஸ்வாமி சந்நிதியின் வலப் புறம் அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது. இப்படி, அம்பாள் ஸ்வாமியின் வலப்பாகத்தில் சந்நிதி கொண்டிருப்பதை, கல்யாண கோல அமைப்பு என்று சிறப்பிப்பார்கள். ஆகவே, இந்த ஆலயத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருகி வழிபட்டுச் செல்ல, தடைகள் யாவும் நீங்கி, விரைவில் கல்யாணம் கைகூடும் என்கிறார்கள், பக்தர்கள்.

இக்கோயிலின் சிறப்பம்சம் இது மட்டும்தானா? இல்லை. வேறு சிறப்புகளும் இவ்வாலயத்துக்கு உண்டு.

ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடவுளைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்தது. மேலும் தவத்தில் தாங்களே சிறந்தவர்கள் என்றும், தங்கள் மனைவிமார்களாகிய பத்தினி பெண்களின் கற்பே பெரிதென்றும் அவர்கள் கர்வம்கொண்டிருந்தனர். அந்தக் கர்வத்தின் காரணமாக கடவுளை நினைக்கவும், வழிபடவும் மறந்து போனார்கள்.

அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து அந்த ரிஷிகள் தவம் புரியும் தாருகாவனத்துக்கு அனுப்பினார். அதேபோல் தானும் பிச்சாடனர் வடிவம்கொண்டு அந்த முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.

மோகினி அவதாரம்கொண்ட திருமால், முனிவர்கள் அனைவரையும் தன் அழகால் மயக்கி, அவர்களின் தவத்தையும், அதன் பயனாகப் பெற்ற உயர்வையும் கெடுத்தார். இந்த நேரத்தில் சிவபெருமான் முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் மனைவியரிடம் பிச்சை வேண்டினார். அவரின் அழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள் சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் துவங்கினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்