வினைகள் தீர்க்கும் விநாயக சதுர்த்தி

வணி மாதம், ஹஸ்த நட்சத்திரமும் சுக்லபட்ச சதுர்த்தியும் கூடிய நன்னாளில் வருவது விநாயகர் சதுர்த்தி. இந்தத் திருநாளில்தான் பிள்ளையார் அவதரித்தார்.

ஒருமுறை, ஈசனும் அம்பாளும் திருக்கயிலாயத்தில் இருக்கும் சித்திர மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். அங்கேயுள்ள மந்திர மூலங்களின் மீது தங்களின் திருப்பார்வையை செலுத்தினார்கள். அப்போது ஓர் ஒளி வட்டமும் அதிலிருந்து தண்டமும் தோன்றின; தண்டம் ஒலியாக தழைத்தது. இந்த ஒளி ஒலி இரண்டிலும் இருந்து உதித்த திருவடிவே, வரத கணபதி. ஒளி வட்டம் பிந்து; தண்டம் (ஒலி) நாதம். பிந்து மற்றும் நாதத்தில் இருந்து அகர, உகர, மகரம் பிறக்கும். இந்த மூன்றும் சேர்ந்து ‘ஓம்’ என்று ஒலிக்கும். ஆக, ‘ஓம்’காரம் எனும் பிரணவத்தின் உருவமே பிள்ளையார். அவரை, அவர் அவதரித்த திருநாளில் வழிபடுவதால், அனைத்து கடவுளரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

சரி! விநாயகர் சதுர்த்தியில் அவரை வழிபடுவது எப்படி?

இதுகுறித்து, தன் மகளான உமையவளுக்கு இமவான் விவரித்த தாக, விநாயக சதுர்த்தி விரத வழிபாடு குறித்து விளக்குகின்றன புராணங்கள். விநாயகர் சதுர்த்தி தினத்தில், அதிகாலையில் நீராடி நித்ய கர்மங்களை நிறைவேற்ற வேண்டும். பிறகு பூஜை நடைபெறும் இடத்தைச் சுத்தப்படுத்தி, மாக்கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும். அன்று மண்ணால் பிள்ளையார் விக்கிரகம் செய்து வைத்து வழிபடுவது விசேஷம்!

அழகான குடை அமைத்து, அதன் கீழ் விநாயகரை அமர்த்தி, அருகம்புல், வெள்ளெருக்கு மாலை சார்த்தி, சந்தனகுங்கும திலகமிட்டு  அலங்கரிக்கலாம். நைவேத்தியமாக பழங்கள், அச்சு வெல்லம், அவல், பொரிகடலையுடன், சுண்டல் மற்றும் கொழுக்கட்டையை தாம்பூலத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், விநாயகர் ஸ்லோகங்கள், துதிகள் பாடி, தூப தீப உபசாரங்கள் செய்து வழிபட வேண்டும். பின்னர்,  குறிப்பிட்டதொரு நன்னாளில், விநாயகர் விக்கிரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலையில் சேர்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்