கணேச ஸ்தோத்திரம்

ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி:


கருத்து: எப்போதும் குழந்தை வடிவம் கொண்டதும், இடையூறாகிய மலையைப் பிளக்கும் வலிமையுள்ளதும், பெரிய யானையின் முகத்தை உடையதும், பரமேஸ்வரனால் அபிமானிக்கத் தக்கதும், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்களால் தேடத்தக்கதுமான... ஸ்ரீகணேசர் எனும் பெயர் கொண்ட அற்புதமான மங்கள மூர்த்தமானது, லட்சுமிகடாட்சத்தை அருளட்டும்.

இந்த ஸ்தோத்திரப் பாடலைப் பாடி, முழுமுதற் தெய்வமாம் பிள்ளையாரை வழிபடுவோம். அவரருளால் சர்வ விக்கினங் களும் நீங்கி, சகல வளங்களும் கைகூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்