விநாயக விரதங்கள்...

வணி மாதம் வரும் விநாயக சதுர்த்தி மட்டுமின்றி, கணபதி பெருமானின் பேரருளைப் பெற்றுத் தரும் விரதங்கள், இன்னும் பல உண்டு. மகத்துவமான பலன்களை அருளும் அந்த விரதங்களை இங்கே பார்ப்போம்.

* வெள்ளிக்கிழமை விரதம்: இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அனுஷ்டிக்கவேண்டும். விரதத்தைத் தொடங்கும்போதே எத்தனை வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்கவேண்டும் என்பதை சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.

அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு விரதத்தை தொடங்கவேண்டும். பூஜையறையில் கலச ஸ்தாபனம் செய்து, அந்தக் கலசத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்யவேண்டும். பின்னர் கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும். அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது. இரவு படுக்கப்போவதற்கு முன்பு சிறிதளவு பழமும் பாலும் உண்ணலாம் வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்