பிள்ளையார் திருத்தலங்கள்

தங்கம் அருளும் பிள்ளையார்!

திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் 22 கி.மீட்டர் தொலைவில், ‘சிறுகமணி' எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புற்று  மாரியம்மன் திருக்கோயிலில் அருள்பாலித்து  வருகிறார், ஐந்து முகங்கள் கொண்ட ‘பஞ்சமுக விநாயகர்’. இவருடைய திருநாமம்தான் ‘சொர்ண ஆகர்ஷண பஞ்சமுக விநாயகர்’. ‘சொர்ணம்’ என்றால் தங்கம்; ‘ஆகர்ஷணம்’ என்றால்  ‘வழங்குதல்’ என்று பொருள். பக்தர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொர்ணத்தை ஈர்த்தளிக்கும் வல்லமை கொண்டவர் ஆதலால், இப்பெயர் கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர் ஊர்ப் பெரியவர்கள்.

‘ஐ’ என்ற எழுத்து ஐந்து, அழகு மற்றும் தலைவனைக் குறிக்கும். இந்த உலகம் நீர், நிலம், நெருப்பு,  காற்று, ஆகாயம் எனும் ஐம்பெரும்பூதங்களால் ஆனது. ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் (உடல்) உள்ளது’ என்பார்கள். உலகிலும், உடலிலும் ஆட்சி செய்யும் ஐம்பூதப் பொறிகளே ஐந்து தத்துவங்களின்  அடிப்படை ஆதாரங்களாக உள்ளன. இந்த ஐந்து பூதங்களின்,  ஐந்து தத்துவங்களின் விளக்கமே பஞ்ச முக விநாயகர்.

தங்கள் இல்லங்களில் பொன், பொருள் குவிய விரும்புவோர்  சொர்ண ஆகர்ஷண  பஞ்ச முக விநாயகரை  தரிசித்து வேண்டி, அருள் பெற்று உய்யலாம்.

 ர.புஷ்பலதா படம்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்