‘அம்மன் அருளால் தீர்வு கிடைக்கும்’

க்தி விகடனும் தீபம் விளக் கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்கு பூஜை, மயிலாடுதுறைக்கு  அருகில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கதிராமங்கலம் அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி அம்மன்  திருக்கோயிலில் நடைபெற்றது. சரியாக மாலை 6 மணியளவில் துவங்கிய திருவிளக்கு பூஜையில் மயிலாடுதுறை மட்டுமின்றி, நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம் பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

“இங்கு, வனத்திலே அருள்பாலிக்கும் அம்பாளை ஒருமுறை-பூஜை செய்து வழிபட்டால்,  நூறு முறை பூஜை செய்ததற்கான பலன் கிடைக்கும். வனதுர்கா பரமேஸ்வரி அம்மனை முழு மனதோடு வேண்டினால், அஷ்ட லட்சுமி கடாட்சமும்,  தான்ய விருத்தியும் கிட்டும். வழக்குகள் நிவர்த்தியாகி, எதிரித் தொல்லைகள் நீங்கும். இப்படியான மகத்துவம் நிறைந்த வனதுர்கா பரமேஸ்வரியின் சந்நிதியில் திருவிளக்கு பூஜை வழிபாட்டை நடத்தும் உங்கள் அனைவருக்கும் பலமடங்கு நற்பலன்களை அம்பாள் உங்கள் வீடு தேடி வரச்செய்வாள்” என்று கூறினார்,  கோயில் குருக்கள் பாலாஜி.

காட்டுமன்னார்குடியில் இருந்து வந்து திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட தம்பதி சுப்பிரமணி - வனஜா. “சக்தி விகடன் நடத்தும் திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள நாங்கள் மூன்று முறை முயன்றும் நிறைவேறாமல் போனது. இம்முறை வனதுர்காவின் அருளாசியால், இந்த பூஜையில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது” என்று பூரிப்புடன் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்