நாரதர் உலா

அழகர்கோயிலில்... காணிக்கைப் பசுக்களுக்கு ஆபத்து!

‘இணங்காதார் மனம்கூட இணங்கும்; நீ எதிர்வந்தால் எதிர் காலம் துலங்கும்’ என்று ராகத்துடன் பாடியபடி பிரசன்னமானார், நாரதர்.

‘‘என்ன நாரதரே? பாட்டெல்லாம் அமர்க்களமாக இருக்கிறதே’’ என்ற கேள்வியுடன் வரவேற்றோம் நாரதரை.

‘‘ஆமாம், நாம் கோமாதா என்று போற்றிக் கொண்டாடும் பசுக்களைப் பற்றித்தான் அத்தனை அழகாகப் பாடி வைத்திருக்கிறார் கண்ணதாசன்’’ என்ற நாரதர்,  ‘‘ஆனால், கொண்டாடப்பட வேண்டிய பசுக்களின் இன்றைய நிலைதான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது!’’ என்று அங்கலாய்க்கவும் செய்தார்.

அவருடைய அங்கலாய்ப்பில் ஏதோ தகவல் ஒளிந்திருப்பதை நாம் புரிந்து கொண்டாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவரிடமே கேட்டோம்: ‘‘ஏன் என்னாச்சு? நாம் கூட பசுக்களின் இன்றைய நிலை பற்றி ஒரு சிறப்புத் தொடரே வெளியிட்டு இருந்தோமே, எங்காவது பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றனவா?’’

‘‘வெளியில் எங்காவது நடந்தாலே பொறுக்க முடியாது. ஆனால், கோயிலுக்குள்ளேயே இப்படி நடப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.’’

நம் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், பூடகமாகப் பேசிக்கொண்டிருந்த நாரதரை, ‘‘எந்தக் கோயிலுக்குச் சென்று வந்தீர்... விவரமாகச் சொல்லும்’’ என்று விஷயத்துக்குள்  இழுத்தோம்.
‘‘கள்ளழகர் கோயிலுக்குத்தான் சென்று வந்தேன். அங்கு நேர்ந்துவிடப்படும் பசுக்களை நூதன முறையில் திருடிச் சென்று விற்றுவிடுகிறார்களாம்’’ என்ற நாரதர், தொடர்ந்து அந்தப் பிரச்னை குறித்து விரிவாக விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘பல வருடங்களாகவே அழகர்கோயிலில் பசு, ஆடு, சேவல் போன்றவற்றை நேர்ந்துவிடும் வழக்கம் உள்ளது. இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அந்த பசுக்களை ஓட்டிச் சென்று, விற்று நல்ல லாபம் பார்த்துவிடுகிறார்களாம். இதற்கென்றே ஒரு கூட்டம் அங்கே சுற்றிக்கொண்டே இருக்கிறது.

கோயிலுக்கு நேர்ந்துவிடப்படும் பசுக்களை கருப்பண்ணசாமி சந்நிதிக்கு அருகிலோ, நூபுர கங்கை தீர்த்தத்துக்குச் செல்லும் காட்டு வழியிலோ விடுவதுதான் பக்தர்களின் வழக்கம். கோயிலின் பிரதான வாயிலான கோட்டை வாசலைக் கடக்கும்போதே, ஒரு கூட்டம் பின்தொடர ஆரம்பித்துவிடுகிறது. மாட்டைக் கொண்டு விடுபவர்கள் ரசீது வாங்குகிறார்களா என்று கவனிக்கிறார்கள். ரசீது வாங்கவில்லை என்றால், மாட்டை விட்டுச்சென்ற அடுத்த நொடியே போட்டிபோட்டுக்கொண்டு அந்த மாட்டை பிடித்துச்சென்று அடிமாட்டுச் சந்தையில் நல்ல லாபத்துக்கு விற்றுவிடுகிறார்கள்’’ என்றார்.

‘‘பக்தர்கள் முறையாக ரசீது வாங்காமல் மாடுகளை ஏன் நேர்ந்துவிடுகிறார்கள்?’’

‘‘கள்ளழகர்கோயிலுக்கு பசுக்களை நேர்ந்துவிடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், இந்த ரசீதுமுறை இப்போது தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பசுக்களை நேர்ந்துவிடுவதற்கு ரசீது பெறவேண்டும் என்பதை பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், கோயில் நிர்வாகத்தின் சார்பில் எவ்வித விளம்பரமும் செய்யப்படவில்லை. ரசீது கொடுக்கும் இடத்தைத் தவிர, வேறு எங்குமே அறிவிப்புப் பலகை வைக்கவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது’’ என்றார் நாரதர்.

‘‘அதுசரி, கோயிலுக்கு நேர்ந்துவிடப்படும் பசுக்களுக்கு பக்தர்கள் எவ்வளவு பணம் செலுத்தவேண்டுமாம்?’’

‘‘பசுக்களுக்கு 1,205 ரூபாயும், ஆடு மற்றும் சேவல்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் செலுத்தவேண்டும்’’

‘‘இந்த கட்டணத்தை வைத்துக்கொண்டு கோசாலை நடத்த முடியுமா என்ன?’’

‘‘முடியாதுதான். ஆனால், கோசாலைக்கு வேறு வழிகளிலும் வருமானம் வருவதாகச் சொல்கிறார்கள்’’ என்ற நாரதர் அதுகுறித்த விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘கோயிலில் கோ பூஜை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு கோசாலையில் இருந்துதான் பசுக்கள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணர் சிலையின் அருகே பசுவை மட்டும் வைத்து பூஜை செய்ய 500 ரூபாயும், கன்றுடன் சேர்த்து கோ பூஜை செய்ய 1000 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மட்டுமின்றி, சுமார் 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் கோ பூஜைக்கு பசுவை அழைத்து வரும் ஊழியர், அவர் பங்குக்கு 101 ரூபாய் வாங்கிக்கொள்கிறார்’’ என்றவரிடம், ‘‘இப்படியிருக்கும்போது கோயில் தரப்பில் பசுக்களைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?’’ என்று நம் சந்தேகத்தைக் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்