எங்கள் வீட்டு பிள்ளையார்!

பரிசாகக் கிடைத்த பிள்ளையார்கள்!

நான் கே.ஜி. ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.  ஆனாலும் என்னிடம் படித்தவர்கள் பலரும் முகநூல் வழியாக இன்றைக்கும் தொடர்பில் உள்ளனர். அவர்களில் சிலர், வேலை கிடைத்ததும் தங்கள் முதல் மாதச் சம்பளத்தில், எனக்கு ஏதேனும் பரிசுகள் வாங்கித்தந்து மகிழ்வார்கள். நானும் நெகிழ்ச்சியுடன் அவற்றை ஏற்றுக்கொள்வேன். அதேபோல் மிதுன், செளகந்திகா, மஞ்சு ஆகிய மூவரும் வெவ்வேறு தருணங்களில் பரிசளித்தார்கள்.

ஆனால், சொல்லி வைத்தது போல் மூவருமே பிள்ளையாரையே தந்திருந்தார்கள். மூன்று விநாயகர்களும் மூன்று விதம்; கொள்ளை அழகு. ‘பிள்ளையாரைப் பரிசளிக்கலாம்’ என்ற எண்ணம் மூவருக்குமே தோன்றியது எப்படி என்று எனக்கு ஆச்சர்யம். இந்தக் கேள்வியை அவர்களிடமே கேட்டேன்.

‘‘நீங்கள்தான் எங்களின் கைப்பிடித்து முதன் முதலில்  எழுத சொல்லிக் கொடுத்தீர்கள். ஆகவே, உங்களுக்குப் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்ததும் முழுமுதற் கடவுளான பிள்ளை யாரே நினைவுக்கு வந்தார். இந்த விஷயத்தை ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. ஆனால், எங்களுக்குள் உங்களைப்பற்றிய அபிப்ராயம் ஒன்றுதான் என்பதை சொல்லா மல் சொல்கிறார்கள் இந்தப் பிள்ளையார்கள்’’ என்று அவர்கள் கூறியபோது, மிகவும் நெகிழ்ந்துபோனேன்.

இந்த வருடம் சதுர்த்தி பூஜையில், அந்தப் பிள்ளைகள் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையோடு, மூன்று பிள்ளையார்களையும் பூஜையில் வைக்க எண்ணியுள்ளேன். அவர்களின் அன்புக்கு முன்னால் உலகில் எதுவும் இல்லை என்பதை உணர்த்திவிட்டார்கள் இந்த விநாயகர்கள் மூவரும்!

-  பானு பெரியதம்பி, சேலம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்