லட்சம் முறை ஸ்ரீருத்ர பாராயணம் கோடி முறை வில்வார்ச்சனை!

பிரேமா நாராயணன்

ஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமான சிதம்பரத்தில், ஆனந்தக் கூத்தாடும் ஸ்ரீநடராஜர் ஆலயத்தில், அமர்க்களமாக ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஓர் உலக உன்னதம்! ஆமாம்... ஆலய வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரு லட்சம் முறை, சிவனுக்குப் பிரியமான ஸ்ரீருத்ரத்தை பாராயணம் செய்யும் லட்ச ருத்ர பாராயணம், கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கி, தினந்தோறும் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கோடி அர்ச்சனை, லட்ச ஹோமம் என எல்லாமே பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கில் தீட்சிதர்கள் அமர்ந்து ருத்ர மந்திரம் ஓத, அதன்பின் வில்வ அர்ச்சனை மேற்கொள்ளப்படும் இந்த கண்கொள்ளாக் காட்சி, உலகில் எங்கும் இதுவரையில் நடந்திராத ஆன்மிக அற்புதம்.

உலக மக்களின் நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்காகவும் நடத்தப் படும் இந்த லட்ச ருத்ர பாராயண ஏற்பாடுகளுக்கான செலவு முழுவதையும் ஏற்றிருப்பவர், காஞ்சிப் பெரியவர் மேல் தீராத அன்பும் பக்தியும் கொண்டவரும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபருமான பி.ராமகிருஷ்ணன்.

சிதம்பரம் கோயிலின் பொது தீட்சிதர்கள் அனைவரும் ஈடுபட்டிருக்கும் இந்தப் புனிதப் பணியை முன்னின்று கவனித்து வரும் நி.பா.பட்டு தீட்சிதர் மற்றும் முனைவர் எஸ்.ராஜா சோமசேகர தீட்சிதர் இருவரும் இந்தப் பெரும்பணி குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினர்.

‘‘ஸ்ரீருத்ரம் என்பது சிவனுக்கு உகந்த மந்திரம். இன்னும் சொல்லப் போனால், ‘ஓம் நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரமே, ருத்ரத்தில் உள்ள மந்திரம்தான். வேதங்களில் மையத்தின் மையமாகிய இந்த மந்திரத்தின் மகிமை வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.

நான்கு வேதங்களில் பிரதானமான 3 வேதங்களான ரிக், யஜுர், ஸாம வேதங் களின் மையம் யஜுர் வேதம். அதில் உள்ள 7 காண்டங்களில் மையமான 4-வது காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் ருத்ரம், சமகம் ஆகிய சக்திவாய்ந்த இரு மந்திரங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்