வேலுண்டு வினையில்லை!

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கதிர்காம வேலவர் ஆலயம். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று அதிகாலையில்,  சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன்  சக்தி விகடன் மற்றும்  குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவின் சார்பில் வேல்மாறல் பாராயணம் பூஜை தொடங்கியது.

இப்பூஜையில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது இந்த பூஜை. வலையப்பேட்டை கிருஷ்ணன், பவ்யா ஹரிசங்கர் ஆகியோரின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பாராயண இசை நிகழ்ச்சியில் பக்தர்களும் மெய்ம்மறந்து அவர்களோடு இணைந்து பாடியது, பூஜையின் உற்சாகத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது.

வேல்மாறல்  பாராயணத்தின் சிறப்பு குறித்துப் பகிர்ந்துகொண்டார் வலையப்பேட்டை கிருஷ்ணன்.

‘‘அருணகிரிநாதர் முருகக் கடவுளைப் பற்றி 25 வகுப்புகள் பாடியுள்ளார். அதில் ஒன்று, வேல் வகுப்பு. இது 16 அடிகள் கொண்டது. முருக வழிபாட்டின்போது இதைப் பாடிப் பாராயணம் செய்வார்கள். அப்படிப் பாடும்போது, பாடலின் ஒவ்வொரு அடி முடிவிலும், ‘எழுவாய்’ என்கிற பதம் சேர்க்கப்படவேண்டும் . 16 அடி வேல் வகுப்புச் செய்யுளை 64 முறை, 48 நாட்கள் பாடி, முருகனின் அருளைப் பூரணமாகப் பெறமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் வள்ளிமலை சுவாமிகள். அதன் அடிப்படையில்தான் அனைத்து முருகன் ஆலயங்களிலும்  இந்த வேல் மாறல் பாராயணம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ‘வேல் வழிபாடு என்பதுதான் ஆரம்பம். அதன்பிறகுதான் முருக வழிபாடு ஏற்பட்டது. வேலுக்கு ஆற்றல் அதிகம். தனியாக  வேல் பூஜை செய்தால் பலன் அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்