நாரதர் உலா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பரக்கலக்கோட்டையில் பக்தர்கள் பரிதவிப்பா?

ள்ளே வரும்போதே, ‘‘வாரத்தில்  ஒரே ஒரு நாள், அதுவும் இரவு வேளையில்  மட்டுமே வழிபாடு நடைபெறும் கோயில் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’’ என்ற கேள்வியுடன் நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

‘‘தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கமுள்ள பொது ஆவுடையார் கோயிலைப் பற்றித்தானே சொல்ல வருகிறீர்? அந்தக் கோயிலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதாகக் கேள்விப்பட்டோமே... அங்கு போய்வந்தீரா என்ன?’’ என்று கேட்டோம்.

‘‘என் காதுக்கு விஷயம் வந்த பிறகு நானாவது, போகாமல் இருப்பதாவது?’’ என்ற நாரதர், தொடர்ந்து...

‘‘தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ளது பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயில். அந்தக் கோயில், வாரத்தில் ஒருநாள் திங்கட்கிழமை அன்று இரவு மட்டும்தான் திறந்திருக்கும். வாரத்தில் ஒருநாள் என்பதால் உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட கோயில் நிர்வாகம் தரப்பில் செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். முக்கியமாக, போதிய டாய்லெட் வசதிகள் இல்லாததால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்றார்.

‘‘கோயில் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது?’’

‘‘முன்பு இந்தக் கோயில், கிராம நிர்வாகக் கமிட்டியிடம்தான் இருந்தது. கோயிலில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து கிராமப் பொதுமக்கள் கோயில் நிர்வாகத்திடம் வரவு செலவுக் கணக்கு கேட்டிருக்கின்றனர். கணக்கு கேட்ட பாவத்துக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதுதான் மிச்சம். இப்போது அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது’’ என்ற நாரதரிடம், ‘‘அப்படியுமா பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை?’’ என்று கேட்டோம்.

‘‘இல்லையே! கோயில் நிர்வாகம் அறநிலையத்துறையின் கீழ் வந்த பிறகும் அநியாயங்கள் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன. கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் காணிக்கையில் பாதி ஸ்வாஹா செய்யப்படுவதாக பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள்.’’

‘‘போக்குவரத்து வசதி எல்லாம் எப்படி?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்