மணிமூர்த்தீஸ்வரத்தில் நிகழ்ந்த மங்கல பூஜை!

க்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து, வாசகர்கள் நலனுக்காக நடத்திய திருவிளக்கு பூஜை, திருநெல்வேலி, மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீமூர்த்தி விநாயகர் திருக்கோயிலில், கடந்த 23.8.16 அன்று மாலை நடைபெற்றது.

அன்றைய நாள் ‘பௌமா அஸ்வினி’ நாளாக அமைந்திருந்தது ஒரு சிறப்பு. ‘பௌமா’ என்பதற்கு சமஸ்கிருதத்தில் ‘செவ்வாய்’ என்று பொருள். செவ்வாய்க் கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை ‘பௌமா அஸ்வினி’ என்று அழைக்கின்றனர். இந்நாளில் அம்பாளுக்குப் பூஜை செய்வதால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தாரானந்த அமிர்த வர்ஷினி ஆன்மிகக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான திருமதி ராதாராணி வெங்கட கிருஷ்ணன், “எல்லாவித செல்வத்துக்கும் தலைவியானவளும் உலக நாயகியுமான மஹாலக்ஷ்மி, எப்பொழுதும் எல்லாராலும் பூஜிக்கத் தகுந்தவள். அவளை வழிபடும் முறைகள் பலவிதம். இன்று நாம் அவளை எளிய முறையில் தீப வழிபாட்டின் மூலம் பூஜித்து அவள் அருளைப் பெறுவோம்” என்று தனது உற்சாக உரையின் மூலம் வாழ்த்தி, திருவிளக்கு பூஜையைத் துவங்கி வைத்தார்.

பூஜையின் நிறைவில் சக்தி விகடன் வாசகி சங்கரி ராமமூர்த்தி பேசும்போது, “இங்கு நடந்த திருவிளக்கு பூஜையானது ஒரு கூட்டுப் பிரார்த்தனையாகத் திகழ்ந்தது. திருவிளக்கு பூஜையை நிறைவு செய்யும்போது, ‘லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து’ எனக் கூறுதல் வழக்கம். உலக மக்கள் அனைவரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்” என்றார். அதுதானே சக்தி விகடனின் நோக்கமும்!

“இந்தப் பிரார்த்தனையில் கலந்துகொண்டால், கணவன்- மனைவிக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிப்பதை அனுபவபூர்வமாக உணர முடியும்” எனச் சிலாகித்தார் நெல்லையைச் சேர்ந்த அங்காள ஈஸ்வரி.

“முன்பு ஒருமுறை சக்தி விகடன் நடத்திய இப்பூஜையில் கலந்துகொண்டு, என் மகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டேன். என் பிரார்த்தனை பலித்து, இப்போது எனக்கு ஒரு நல்ல மருமகன் கிடைத்திருக்கிறார். சக்தி விகடனுக்கு மனமார்ந்த நன்றி!” என்றார் நந்தினி எனும் வாசகி பரவசத்துடன். 

எங்கெங்கும் நல்லதே நடக்கட்டும்; எல்லோருக் கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கட்டும்!

 - செ. ராஜன், படம்: எல்.ராஜேந்திரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்