ஆஹா... ஆன்மிகம்! - வெட்டிவேர் | Spiritual Titbits - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆஹா... ஆன்மிகம்! - வெட்டிவேர்

தொகுப்பு: ராஜா

கும்பாபிஷேகக் காலங்களில் வேதிகையின் மீதும் வெட்டிவேர் விமானம் அமைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் மூங்கில் குச்சிகள் மீது வெட்டிவேரைக் கொண்டு விமானம் அமைத்தனர். பிற்காலத்தில், அதன் மீது வண்ணச் சரிகைகளால் அழகூட்டும் வழக்கம் ஏற்பட்டது.

லர்கள், இலைகள் ஆகியவை இறைவழிபாட்டில் பயன்படுவது போல், அபூர்வமாக தாவரங்களின் வேர்களும் இறை பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெட்டிவேர்.

கோடை காலத்தில், நீரில் நனைத்த வெட்டிவேர்களைக் கொண்டு இறை மூர்த்தங்களுக்கு விதானம் அமைக்கும் வழக்கம் உண்டு. இது, தெய்வங் களுக்குக் குளிர்ச்சியான பந்தலிட்டதுபோல் இருக்கும்.

றைவனுக்கான அபிஷேக தீர்த்தத்தில் ஏலக்காய், மாசிக்காய் போன்றவற்றுடன் விளாமிச்சை வேரையும் இடுவார்கள். இதனால் அந்த தீர்த்தம் வாசனையையும் குளிர்ச்சியையும் பெறுகிறது.

டும் நீரில் வளரும் தாவரத்தின் வேர்ப்பகுதிதான் வெட்டிவேர். வாசனை மிகுந்த இந்த வேரினை `விளாமிச்சை வேர்’ எனவும் அழைப்பார்கள்.

வாசனை மிகுந்த வெட்டிவேரை மாலையாகக் கட்டி இறைவனுக்கு அணிவிப்பார்கள். அவ்வகையில், சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு வெட்டிவேர் மாலைகள் அதிக அளவில் அணிவிக்கப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick