ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை | Rasipalan - Sakthi Vikatan | சக்தி விகடன்

ராசிபலன் - மார்ச் 28 முதல் ஏப்ரல் 10 வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

திட்டமிட்டு சாதிக்கவேண்டிய நேரம் இது.

புரட்சிகரமான சிந்தனை கொண்டவர்களே!

செவ்வாய் ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகள் நல்லபடியாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

சுக்கிரன் 12-ல் மறைந்திருப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். மனதுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் உதவிகள் உண்டு. ஆனால், சூரியனும் 12-ல் இருப்பதால், பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களால் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில், சக ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டாம். அவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. கலைத் துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுதப் போராடவேண்டி இருக்கும்.


கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

மாறுபட்ட சிந்தனை தேவைப்படும் தருணம் இது.

கொள்கைப்பிடிப்புடன் வாழ்பவர்களே!

சூரியனும் புதனும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாகும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள்.

பூர்வீகச் சொத்தில், நீங்கள் விரும்பியபடி சீர்திருத்தம் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சர்ப்பக் கிரகங்களும் சனியும் சாதகமாக இல்லாததால், வீண் சந்தேகம், ஏமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களது செல்வாக்கு உயரும். மூத்த அதிகாரிகள் உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினரே! உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick